Sandilyan Tamil Historical Novels – Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

சாண்டில்யன் தமிழ் புதினங்கள் :
[ sandilyan tamil historical novels ]

pengalthalam

சாண்டில்யன்

                  அமரர் திரு சாண்டில்யன் அவர்கள் தமது எழுத்தின் வாயிலாக நமது தமிழின், தமிழரின், பெருமை மிக்க வரலாற்றை உலக அளவில் கொண்டுசெல்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது மக்களால் மறுக்க முடியாத உண்மை.

                    இவரின் நாவல்களில் இக்காலத்திற்கு ஒத்துக்கொள்ள இயலாத சில செய்திகள் இருக்கின்றன. அவற்றை நமது தமிழில் உள்ள அகநானூற்று செய்திகளைப் போல தவிர்த்து விட்டு பார்த்தால், மீதி இருக்கின்ற மற்ற விஷயங்கள் அம்மாம்மா…எத்துணை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தமிழர் வீரம், அன்பு, விவேகம், போர் நெறி, வாழ்வியல் நடைமுறைகள், நாகரீக எண்ணங்கள், நீதி வலுவா செயல்பாடுகள், அவற்றில் ஊடுருவி நிற்கும் மற்றவர்களுக்கு படிப்பினை அளிக்கும் எள்ளல்கள், என்று பலவற்றை இவரது புதினங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

                அதேநேரத்தில் எக்காலத்திற்கும் பொருந்தும் வாழ்வை வழிநடத்தத் தேவையாக உள்ள வேதாந்த, பௌதீக கருத்துக்களையும் கதைகள் நெடுக நாம் காண முடிகிறது. அவை புரிந்து வாசிக்கும் யாவருமே, தம் வாழ்வில் சில முறைகளாவது அவற்றை கடைப்பிடித்து, துன்பக்கடலில் மூழ்கிப் போகாமல் தம்மைக் காத்துக்கொள்ளும் நிலைகளையும் கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

               அறிவில் முதிர்ச்சி இல்லாத சில மனிதர்கள் ‘அய்யே…இவர் நாவல்களா…’ என்று கூறுவது உண்டு. ஆனால் மனக்கட்டுப் பாடும், அறிவில் தெளிவும் உள்ளவர்களுக்கு சாண்டில்யன் அவர்களின் நாவல்கள் ஒரு பொக்கிஷமாகவே தெரியும்.

                   இவருடைய அத்துணை புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன. சிறுவயது முதலே சேர்த்து, ஒரு நூலகமாக இன்றும் என் வீட்டில் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். பொதுவாக இணையத்தில் வாசிப்பதை விட புத்தகத்தைக் கையில் வைத்து சிறிது சிறிதாக ரசித்து வாசிக்கும் போது, அதன் சுவையே தனி தான். நீங்களும் இணையத்தில் வாசித்தாலும், நூலகம் சென்று புத்தகம் எடுத்து வாசித்துப் பாருங்கள், தோழிகளே. நீங்களே மேற்சொன்ன உணர்வுகளை கண்டிப்பாக உணர்வீர்கள்.

               இவருடைய நூல்கள் பல்வேறு தளங்களிலும் பதியப்பட்டுள்ளன. தமிழ் நாவல் ரசிகைகள் இவர் நாவல்களையும் வாசித்து மகிழும்படி, ஒரு ரசிகையாக கேட்டுக்கொள்கிறேன்.

அமேசான் லிங்க் :

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *