Completed Tamil Novels
[ நிறைவுற்ற தமிழ் நாவல்கள் ]

pengalthalam

குறுங்கதை :

“ மாண்புறு மங்கையே..." (வைகை ஒரு பக்க குறுங்கதை போட்டி - 2024)

வதனி பிரபு
வணக்கம் நட்புக்களே!
மனமெங்கும் பொங்கும் மகிழ்ச்சியுடன் வைகையின் போட்டியை அறிவிக்க வந்துவிட்டோம். மார்ச் மாதம் நடைபெற இருக்கும் போட்டி எதற்கென்று அனுமானித்து இருக்கும் எங்கள் அபிமான எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களே…
ஆம், இது மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்மையை சிறப்பிக்கும் வகையில், பெண்மையின் சிறப்பை மீண்டும் மீண்டும் உணர, உணர்த்த நடைபெற இருக்கும் ஒரு பக்க குறுங்கதை போட்டி.
“ மாண்புறு மங்கையே…”
(வைகை ஒரு பக்க குறுங்கதை போட்டி – 2024)
எழுத்து உலகில் உங்கள் அனைவரின் திறமைகளுக்கும் ஒரு சவால்!
பரிசு:
சிறந்த மூன்று கதைகளுக்கு புத்தகப் பரிசு வழங்கப்படும். மேலும் கன்னி முயற்சியாக ஆரம்பிக்கும் எழுத்தாளர்களின் கதைகளுக்கும் சிறப்பு பரிசு உண்டு.
விதிமுறைகள்:
• யார் வேண்டுமென்றாலும் எத்தனை கதைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.
• “ மாண்புறு மங்கையே… ” என்ற தலைப்பில் 200 வார்த்தைகளுக்கு குறையாமல் 300 வார்த்தைகளுக்கு மிகாமல் கதையை எழுதி வைகைத்தள முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும்.
• முகநூலில் நம் வைகை தள பக்கத்தில் உங்கள் ஒரு பக்க கதைகளை வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பதிவிடலாம்.
• எழுத்துப்பிழை இல்லாது கதையை பதிவிடுவது அவசியம்.
* வைகை தள முகநூல் பக்கத்தில் நேரடியாக எழுத்தாளர்களோ, வாசகர்களோ பதிவிடலாம். முக்கியமாக #மாண்புறு_மங்கையே24 என்ற ஹேஷ்டேக் இட வேண்டும். எழுத்தாளர் பெயர், எத்தனையாவது கதை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
• ஏற்கனவே வெளியாகிய/ தேர்வு செய்யப்பட்ட கதைகளை அனுப்பக் கூடாது.
* நாள் 03-03-2024 முதல் 08-03-2024 இரவு பத்து மணி வரை கதைகளை பதிவிடலாம்.
*மார்ச் 10 ந்தேதி முடிவுகள் வோட்டிங்க் முறையில் அறிவிக்கப்படும்.
எமை அன்பால் ஆளும் எழுத்தாளர்களே … வாசகர்களே… நட்புக்களே….
உங்களின் ஆதரவாலும், அன்பாலும், விமர்சனத்தாலும் வைகை தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் அந்த உன்னதத்திற்கு என் நன்றிகள்.
வைகைத்தளத்தில் வரும் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், “மாண்புறு மங்கையே…” என்ற தலைப்பில் ஒரு பக்க குறுங்கதை போட்டியில் எழுத்தாளர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.
வளையும் நதிகளுக்கு கரைகள் இருபுறமும் காவல் தந்து துணை நிற்பது போல், வைகைத்தளத்திற்கு என்றும் உறுதுணையாய் இருக்கும் வாசகக் கண்மணிகளும் பங்கேற்று பெண்ணின் பெருமையை உலகறியச் செய்யலாம்.
கதைகளின் விளை நிலமாய் வைகை தளம் அமைக்க, அதனை நட்புக்களமாய் மாற்றிய இனிய நட்புகளும் பங்கேற்று பெண்மையைக் கொண்டாடலாம்.
பெண்ணே நீ உன்னையே உணர்வாய்
பெரும்புகழ் பெற்று என்றும் வளர்வாய்
விண்ணும் மண்ணும் வியந்து போற்ற
விந்தைகள் புரிந்து நிதமும் மலர்வாய்
— with Viji.

Tags,
completed tamil novels, finished tamil novels, tamilnovels, tamil completed novels, tamil finished novels, tamil writers completed novels, new tamil novel links, ramanichandran tamil novels, completed tamil novels, finished tamil new novels, names of new tamil novel writers, tamil novel writers,

Pengal Thalam
Author: Pengal Thalam

Post Views: 8,527

Like this:

Like Loading...
%d bloggers like this: