அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் செய்வது எப்படி? – Pengal Thalam

நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான்புதுவரவு > Shop > Forum > Dramas >

pengalthalam

படிநிலைகள் :

1]  அமேசானில் sign in செய்து, உங்களுக்கு ஒரு கணக்கு துவங்குவது.
2]  உங்கள் மொபைலில் play store-ல் உள்ள amazon kindle ஆப்பை பதிவிறக்குவது.

1] அமேசானில் sign in :

       நீங்கள் இந்தியாவில் இருந்தால் amazon.in – ஐ ஓபன் செய்துகொள்ளுங்கள். [ அமேசான் நம்பகமான தளம் என்பதால் நீங்கள் கணக்கு துவங்குவதால் உங்கள் மொபைலுக்கு எந்த பாதிப்பும் வராது.] 

    இந்த பக்கத்தில் மேலே உள்ள ‘sign in’ ஐ க்ளிக் செய்யுங்கள்.

            அதில் இவ்வாறு வரும்.  [ நீங்கள் ஏற்கனவே அதில் ஏதேனும் பொருட்கள் வாங்கி இருந்தீர்கள் எனில் வெறும் log in செய்தால் போதுமானது. ] நீங்கள் புதிதாக இப்போது தான் கணக்கு துவங்க வேண்டும் என்றால் மேலே படத்தில் உள்ள ‘create account’ – ஐ தேர்ந்தெடுத்து கீழே உள்ள ‘continue‘ ஐ கிளிக்குங்கள். 

                இந்த பக்கம் ஓபன் ஆகும். இதில்
1] உங்கள் பெயர்,
2] மொபைல் நம்பர் [ நீங்கள் வங்கி மற்றும் ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் நம்பர் அல்லாது சாதாரணமாக பேசுவதற்கு பயன்படுத்தும் நம்பராக இருந்தால் நலம். இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை.]
3] ஈமெயில் முகவரி  பதிவிட தேவையில்லை.
4] ‘password‘ [ மறக்காமல் நினைவு வரும் கடவுச்சொல்லாக இருக்கட்டும். ]

                  இவற்றை பதிந்த பிறகு அதே பக்கத்தில் கீழே ‘verify mobile number’ என்று இருக்கும். அதனை க்ளிக்கினால் அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைலுக்கு வரும் OTP நம்பரை பதிந்து கீழே உள்ள ‘create your amazon account’ ஐ கிளிக்கினால் உங்கள் அமேசான் அக்கௌன்ட் தயார்.

உங்கள் பெயருடன் உள்ள அமேசான் கணக்கு இது.

2]  மொபைல் play store-ல் amazon kindle ஆப்பை பதிவிறக்குவது.

            அமேசானில் கணக்கு துவங்கினால் தான் உங்களால் கிண்டலே ஆப் – ல் log in செய்ய இயலும். அவ்வாறு கணக்கு துவங்கிய பின் உங்கள் மொபைல் play store-ல் amazon kindle என்று டைப் செய்து வரும் லோகோ-வை [ படிப்பது போல உள்ள படத்தை ] கிளிக் செய்தால் வரும் kindle appinstall செய்ய அதை க்ளிக் செய்து பதிவிறக்கவும். முடிந்தவுடன் open செய்யுங்கள்.

               kindle appopen செய்தவுடன் மேலே உள்ள முதல் படத்தில் உள்ளது போல home page வரும். அதன் கீழே உள்ள library page ஐ கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் ‘SHOP THE STORE’ ஐ க்ளிக் செய்தால் மூன்றாவது படத்தில் உள்ளது போல ‘sign in’ செய்ய கேட்கும். அதில் உங்கள் அமேசான் கணக்கின் மொபைல் நம்பரையும், அதன் கடவுச்சொல்லையும் [ password ] பதிவு செய்யுங்கள்.

        உங்கள் kindle app தயார். facebook – ல் எழுத்தாளர்கள் தரும் அமேசானின் இலவச புத்தக இணைப்பை க்ளிக் செய்து, அந்த புத்தக பக்கத்தில் உள்ள ‘Buy now’ என்ற பட்டனைக் க்ளிக் செய்தால் புத்தகம் உங்கள் kindle app – ல் அது எந்த கட்டணமும் இல்லாமல் நீங்கள் படிப்பதற்காக இலவசமாக பதிவிறக்கம் ஆகிவிடும்.

'பெண்கள் தளம் ஹேமா' - வின் ஆன்லைன் விற்பனை

25% தள்ளுபடி - மே 10 வரை :

Tags,
amazon tamil novels, amazon new tamil novels, amazon new tamil books, amazon hot new releases tamil books, amazon kindle books, amazon kindle tamil books, amazon Kindle App பதிவிறக்கம் செய்வது எப்படி?, how to download amazon kindle app in tamil,

Pengal Thalam
Author: Pengal Thalam

1 thought on “அமேசானில் கிண்டலே ஆப் [ Kindle App ] பதிவிறக்கம் செய்வது எப்படி? – Pengal Thalam”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *