எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்முக்கிய அறிவிப்புகள்ஷேஹா ஸகி
ஷேஹா ஸகி
Pengal Thalam@admin
2,662 Posts
#1 · April 26, 2024, 8:35 pm
Quote from Pengal Thalam on April 26, 2024, 8:35 pmஹாய் ஃப்ரெண்ட்ஸ்....ரொம்ப நாளைக்கு அப்பறம் ஸ்டோரி பத்தின அப்டேட்டோட வந்திருக்கேன்... சோ....... இங்க யாரெல்லாம் தஷுரி பாகம் 1,2 மற்றும் 3 ரீட் பண்ணியிருக்கீங்கஏன்னா... இனி Ongoing la தஷுரியோட எபிசோட்ஸ்ஸ அப்லோட் பண்ணலாம்னு இருக்கேன்... விக்டர் லோரன்ட்டோட அதிரடிய தஷுரியோட காதல இனி Ongoing la வாசிக்கலாம்...கதைப் பற்றி சின்ன முன்னோட்டம்எத்தனை மணிநேரங்கள் மயக்கத்தில் கிடந்தாளோ! லேசாக சுயநினைவுக்குத் திரும்பி தஷுரியின் விழிகள் லேசாகத் திறக்க, சரியாக அவளை அடைத்திருந்த அறைக்கதவு திறக்கப்பட்டது.உள்ளே வேகவேகமாக நுழைந்த சில ஆட்கள் அவள் மேல் ஒரு வாலி நீரை ஊற்றி, அவளின் முழங்கையை இறுகப்பற்றித் தூக்கி நிற்க வைக்க, அரை மயக்கத்தில் நிற்கக் கூட முடியாமல், "என்..என்னை விடுங்..க!" என்று திக்கித்திணறி அவள் பேசியும், கிட்டத்தட்ட தரதரவென இழுத்த வண்ணம் அவளை கொண்டுச் சென்றனர் அவர்கள்.செல்லும் வழியில் மங்கலாகத் தெரிந்த காட்சிகளில் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சுற்றி கண்ணாடியிலான விலை உயர்ந்த பொருட்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்க, அந்த வராண்டா முழுவதும் கண்ணாடியிலான சுவர் அலங்காரங்கள். ஏதோ மாளிகைக்குள் இருப்பது போலான உணர்வு அவளுக்குள்.கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலையிலிருந்து மீண்டு விழிகள் தெளிவு பெற, இவளை அந்த பெரிய அரங்கம் போலிருந்த ஹாலில் கொண்டு வந்து நிறுத்திய மறுகணம் அந்த ஹாலில் இன்னொரு புறத்திலிருந்த பெரிய கதவுகள் பெரிய சத்தத்தோடு திறக்கப்பட்டன.திறக்கப்பட்ட கதவுகளுக்கு நடுவே கருப்பு நிற ஷர்ட்டில், கழுத்தில் அன்றில் பறவை வடிவ டாட்டூவோடு ஆறடிக்கும் மேலான உயரத்தில் பூனை விழிகள் ஆனால் கழுகுப்பார்வையோடு வந்தான் அவன். விக்டர் லோரன்ட்.அவன் பக்கத்தில் நெருங்க நெருங்க, தஷுரியின் விழிகள் விரிந்து அவன் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்க, தன் ஆட்களுக்கு நடுவே நின்றிருந்தவளை விழிகளைச் சுருக்கிப் பார்த்தவாறு வந்து நின்றான் விக்டர். அவனைப் பார்த்ததுமே அவனுடைய ஆட்களின் முகத்தில் பவ்வியம் தெரிய, தஷுரியோ விக்டரையே 'யார்ரா இவன்?' என்று மனதில் தோன்றிய கேள்வியோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.அவனும் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, தன் பின்னால் எப்போதும் மறைத்து வைத்திருக்கும் தன் துப்பாக்கியை கண்ணாடி மேசையில் வைத்து அங்கு சிம்மாசனம் போலிருந்த பெரிய சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர, அங்கிருந்த அடியாளொருவன் தஷுரியை மீண்டும் இழுத்துக்கொண்டுச் சென்று, "இந்த பொண்ணு நாம ஜெஸில ஷூட் பண்றதை வீடியோ எடுத்து போலீஸ்ல காண்பிச்சா. அவன் நம்ம ஆளா போயிட்டான் சார். அதான் இவள உங்க முன்னாடி கொண்டு வந்திருக்கோம்" என்றான் விக்டரின் முன் அவளை நிறுத்தி.நாடியை நீவி விட்டவாறு தலையை சரித்து தஷுரியை மேலும் கீழும் பார்த்தவன், தாவணியிலிருந்த அவளுடைய தோற்றத்தில் புருவங்கள் இரண்டையும் கண நேரத்தில் தோன்றிய ரசனையில் ஏற்றி இறக்கி, "பேரென்ன?" என்று ஃப்ரென்ச்சில் கேட்க, அப்போதிருந்த பதற்றத்திலும் பயத்திலும் படித்த கொஞ்சநஞ்ச ஃப்ரென்ச்சும் அவளுக்கு மறந்துதான் போயிருந்தது."ஆங்..." என்று தஷுரி மலங்க மலங்க விழித்து, "என்னை விடுங்க... நான் எதுவும் பண்ணல்ல. எனக்கு எங்க ஊருக்கு போகணும், அம்மாட்ட போகணும். என்னை விடுங்க!" என்று தமிழையே திக்கித்திணறிப் பேசிப் புலம்ப, விழிகளைச் சுருக்கி அவளை கூர்ந்து நோக்கியவனின் புருவங்களோ முடிச்சிட்டன.சில கணங்களே அவளை பேச விட்டிருப்பான். விக்டர் தன் அடியாளைப் பார்த்த பார்வையில் அடுத்து அவன் தஷுரியின் நெற்றிப்பொட்டில் வைத்த துப்பாக்கியில் அவளுடைய வார்த்தைகள் தானாக தொண்டைக்குள் மறைந்தன.அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு நடுநடுங்கிப் போய் நிற்க, அவன் ஒரு அடி அவளை நோக்கி வைத்த அதேகணம் தானாக தஷுரியின் கால்கள் இரண்டடி பின்னால் நகர்ந்தன.பயத்தில் இதழை அவள் நாவால் ஈரமாக்கிக்கொள்ள, அவளுடைய உடல் நடுக்கமும், அவள் செய்கைகளும் அவனுடைய கூர்மையான பார்வைக்கு தெரியாமலில்லை. அந்த பயம் வழக்கம் போல் அவனுக்குள் கர்வத்தை உருவாக்கி இதழ்கள் ஏளனமாக வளைந்தன.******************சோ.... திங்கள்லயிருந்து எபி அப்லோட் பண்ணுவேன்... வெயிட் பண்ணிட்டே இருங்க.. யாரையெல்லாம் டேக் பண்ணணும் மக்களே...-ஷேஹா ஸகி
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்....
ரொம்ப நாளைக்கு அப்பறம் ஸ்டோரி பத்தின அப்டேட்டோட வந்திருக்கேன்... சோ....... இங்க யாரெல்லாம் தஷுரி பாகம் 1,2 மற்றும் 3 ரீட் பண்ணியிருக்கீங்க
ஏன்னா... இனி Ongoing la தஷுரியோட எபிசோட்ஸ்ஸ அப்லோட் பண்ணலாம்னு இருக்கேன்... விக்டர் லோரன்ட்டோட அதிரடிய தஷுரியோட காதல இனி Ongoing la வாசிக்கலாம்...
கதைப் பற்றி சின்ன முன்னோட்டம்
எத்தனை மணிநேரங்கள் மயக்கத்தில் கிடந்தாளோ! லேசாக சுயநினைவுக்குத் திரும்பி தஷுரியின் விழிகள் லேசாகத் திறக்க, சரியாக அவளை அடைத்திருந்த அறைக்கதவு திறக்கப்பட்டது.
உள்ளே வேகவேகமாக நுழைந்த சில ஆட்கள் அவள் மேல் ஒரு வாலி நீரை ஊற்றி, அவளின் முழங்கையை இறுகப்பற்றித் தூக்கி நிற்க வைக்க, அரை மயக்கத்தில் நிற்கக் கூட முடியாமல், "என்..என்னை விடுங்..க!" என்று திக்கித்திணறி அவள் பேசியும், கிட்டத்தட்ட தரதரவென இழுத்த வண்ணம் அவளை கொண்டுச் சென்றனர் அவர்கள்.
செல்லும் வழியில் மங்கலாகத் தெரிந்த காட்சிகளில் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சுற்றி கண்ணாடியிலான விலை உயர்ந்த பொருட்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருக்க, அந்த வராண்டா முழுவதும் கண்ணாடியிலான சுவர் அலங்காரங்கள். ஏதோ மாளிகைக்குள் இருப்பது போலான உணர்வு அவளுக்குள்.
கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலையிலிருந்து மீண்டு விழிகள் தெளிவு பெற, இவளை அந்த பெரிய அரங்கம் போலிருந்த ஹாலில் கொண்டு வந்து நிறுத்திய மறுகணம் அந்த ஹாலில் இன்னொரு புறத்திலிருந்த பெரிய கதவுகள் பெரிய சத்தத்தோடு திறக்கப்பட்டன.
திறக்கப்பட்ட கதவுகளுக்கு நடுவே கருப்பு நிற ஷர்ட்டில், கழுத்தில் அன்றில் பறவை வடிவ டாட்டூவோடு ஆறடிக்கும் மேலான உயரத்தில் பூனை விழிகள் ஆனால் கழுகுப்பார்வையோடு வந்தான் அவன். விக்டர் லோரன்ட்.
அவன் பக்கத்தில் நெருங்க நெருங்க, தஷுரியின் விழிகள் விரிந்து அவன் முகம் தெளிவாகத் தெரியத் தொடங்க, தன் ஆட்களுக்கு நடுவே நின்றிருந்தவளை விழிகளைச் சுருக்கிப் பார்த்தவாறு வந்து நின்றான் விக்டர். அவனைப் பார்த்ததுமே அவனுடைய ஆட்களின் முகத்தில் பவ்வியம் தெரிய, தஷுரியோ விக்டரையே 'யார்ரா இவன்?' என்று மனதில் தோன்றிய கேள்வியோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனும் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, தன் பின்னால் எப்போதும் மறைத்து வைத்திருக்கும் தன் துப்பாக்கியை கண்ணாடி மேசையில் வைத்து அங்கு சிம்மாசனம் போலிருந்த பெரிய சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர, அங்கிருந்த அடியாளொருவன் தஷுரியை மீண்டும் இழுத்துக்கொண்டுச் சென்று, "இந்த பொண்ணு நாம ஜெஸில ஷூட் பண்றதை வீடியோ எடுத்து போலீஸ்ல காண்பிச்சா. அவன் நம்ம ஆளா போயிட்டான் சார். அதான் இவள உங்க முன்னாடி கொண்டு வந்திருக்கோம்" என்றான் விக்டரின் முன் அவளை நிறுத்தி.
நாடியை நீவி விட்டவாறு தலையை சரித்து தஷுரியை மேலும் கீழும் பார்த்தவன், தாவணியிலிருந்த அவளுடைய தோற்றத்தில் புருவங்கள் இரண்டையும் கண நேரத்தில் தோன்றிய ரசனையில் ஏற்றி இறக்கி, "பேரென்ன?" என்று ஃப்ரென்ச்சில் கேட்க, அப்போதிருந்த பதற்றத்திலும் பயத்திலும் படித்த கொஞ்சநஞ்ச ஃப்ரென்ச்சும் அவளுக்கு மறந்துதான் போயிருந்தது.
"ஆங்..." என்று தஷுரி மலங்க மலங்க விழித்து, "என்னை விடுங்க... நான் எதுவும் பண்ணல்ல. எனக்கு எங்க ஊருக்கு போகணும், அம்மாட்ட போகணும். என்னை விடுங்க!" என்று தமிழையே திக்கித்திணறிப் பேசிப் புலம்ப, விழிகளைச் சுருக்கி அவளை கூர்ந்து நோக்கியவனின் புருவங்களோ முடிச்சிட்டன.
சில கணங்களே அவளை பேச விட்டிருப்பான். விக்டர் தன் அடியாளைப் பார்த்த பார்வையில் அடுத்து அவன் தஷுரியின் நெற்றிப்பொட்டில் வைத்த துப்பாக்கியில் அவளுடைய வார்த்தைகள் தானாக தொண்டைக்குள் மறைந்தன.
அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு நடுநடுங்கிப் போய் நிற்க, அவன் ஒரு அடி அவளை நோக்கி வைத்த அதேகணம் தானாக தஷுரியின் கால்கள் இரண்டடி பின்னால் நகர்ந்தன.
பயத்தில் இதழை அவள் நாவால் ஈரமாக்கிக்கொள்ள, அவளுடைய உடல் நடுக்கமும், அவள் செய்கைகளும் அவனுடைய கூர்மையான பார்வைக்கு தெரியாமலில்லை. அந்த பயம் வழக்கம் போல் அவனுக்குள் கர்வத்தை உருவாக்கி இதழ்கள் ஏளனமாக வளைந்தன.
******************
சோ.... திங்கள்லயிருந்து எபி அப்லோட் பண்ணுவேன்... வெயிட் பண்ணிட்டே இருங்க.. யாரையெல்லாம் டேக் பண்ணணும் மக்களே...
-ஷேஹா ஸகி
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 115,959