எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
விஜயமலர்
Quote from Pengal Thalam on April 12, 2024, 1:07 pmவிஜயமலர்:
வணக்கம் மக்களே. தொலைதூரத்து வெளிச்சம் நீ... நம்ம குட்டிமாமா புத்தகமா வந்திட்டார். விரும்பினவங்க பிரியா நிலையத்திடம் பெற்றுங் கொள்ளுங்க. ஆன்லைனில் எங்க மிளிர் பதிப்பகத்திடம் பெற்றுக் கொள்ள, எங்கள் வட்ஸ்அப் இலக்கத்தோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்க. அனுப்பு கூலி தனி.
பாகம் 1 - 400/=
பாகம் 2 - 310/=
மிளிர் பதிப்பகம் வாட்ஸ்அப் இலக்கம்: 9443727506
சின்னதா ஒரு முன்னோட்டம்
“மாமா...! நீங்களா...! நீங்கள் எங்கே இங்கே...?” என்றாள். அவனோ இவளை யோசனையுடன் பார்த்தவாறு,
“மாமா?” என்றான் புரியாமல். பின்புதான் அவளை எங்கோ பார்த்திருக்கிறோம் என்பதே அவனுக்கும் தோன்றியது போலும். தன் புருவங்களைச் சுருக்கி, எங்கே பார்த்தோம் என்று நினைவலைகளுக்குள் தேடிப் பார்த்தான். அந்த நீண்ட விழிகள், குழந்தை முகம்... அத்தனை சுலபத்தில் மறந்துவிடக் கூடிய முகமல்ல. இதை எங்கோ பார்த்திருக்கிறோம், எங்கே எங்கே...” என்று தடுமாறியவனுக்குப் பளிச்சென்று மின்னலாய் அது நினைவுக்கு வந்தது.
“நீ... நீ... சமர்த்தியின் உறவினர்தானே...” என்று கண்டுவிட்ட மலர்ச்சியில் கேட்க உடனே விதற்பரையின் முகம் வாடிப்போயிற்று.
சொந்த அத்தையின் கணவர் உத்தியுக்தனுக்கு, தன் மனைவியின் மருமகளை இத்தனை சிரமப் பட்டா நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்? அது சரி... நெருங்கிப் பழகும் அளவிலா இரு குடும்பங்களுக்கும் இடையே நெருக்கம் இருந்தது. உத்தியக்தன் ஒரு போதும் இவர்களோடு ஒட்டி உறவாட முயன்றதுமில்லை நெருங்கிப் பழக அனுமதித்ததும் இல்லை. அப்படியிருக்கையில் இவளை நினைவில் வைத்திருப்பான் என்று நினைப்பதே முட்டாள்தனம். அதுவும், சமர்த்தித் திருமணம் முடித்த போதும் சரி, அவனை விட்டுப் பிரிந்த பின்னாலும் சரி அவனைப் பார்க்கும் வாய்ப்பு இவளுக்கு இருந்ததில்லை. ஒரு முறை அத்தையை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்திருந்தான். அப்போதும் இவளை அவன் சரியாகப் பார்த்தானா என்பது கேள்விதான்... பார்க்கப் போனால் இந்தளவுக்கு அவளை அடையாளம் கண்டதே பெரிய விடயம்தான்?” வருத்தத்துடன் எண்ணியவளாய்த் தன் தலையை அசைத்தவள்,
“ஆமாம்... சமர்த்தியின் மருமகள்...” என்றாள் முகம் வாட. உறவுகள் என்பது கூடி மகிழ்வது தானே... அந்த உறவுகளே தூர நிற்கும்போது, மனிதனாய் பிறந்ததற்குப் பலன் எதுவுமில்லை என்றாகிவிடுகிறது அல்லவா... அது அப்பட்டமாக மனதை வருத்தினாலும், அதைச் சமாளிப்பவள் போல, மன்னிப்புக் கேட்கும் குரலில் உதடுகளில் புன்னகையைத் தழுவ விட்டாள்.
“சா... சாரி மாமா... ஏதோ யோசனையில்... தெருவைக் கடக்கும் பொது, உங்கள் வாகனத்தைக் கவனிக்கவில்லை... ரியலி சாரி...”
“இட்ஸ் ஓக்கே... திடீர் என்று நீ குறுக்கே வந்ததும் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தடையை இறுக்கி அழுத்தியதால், பனித்தரை இழுத்துவிட்டது....”
அவன் சொல்லும் போதே, வலிக்காத காலை ஊண்டி ஓரளவு எழுந்தவள், நிமிர்ந்து நிற்பதற்காக, மறு காலையும் தரையில் வைக்க முயல, அது கொடுத்த கனமான வலியில் தன்னைச் சமாளிக்க முடியாது, “அவுச்...” என்கிற மெல்லிய அலறலுடன், மடங்கித் தரையில் விழப்போனாள்.
அதைக் கண்டு மின்னல் வேகத்துடன் எழுந்தவன், அவள் விழா வண்ணம், அவளுடைய தோள்களைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டுத் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுத்த வேகத்தில் அவன் தடித்த அகன்ற பலம்கொண்ட தேகத்தில் மோதி நின்றாள் விதற்பரை. மோதி நின்றவளை மேலும் விழுந்துவிடா வண்ணம் தன்னோடு இறுக அணைத்தும் கொண்டான். அதன் விளைவு, அவனுடைய வலக்கரம் அவளுடைய மேல் முதுகை அணைத்துப் பிடித்திருக்க, இடது கரமோ இடையோடு ஓடி அழுந்த பிடித்துக் கொண்டது.
........................................................................................................................
தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை. பயத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. பற்கள் பயத்தில் தந்தியடித்தன.
“இது என்ன... வலது... வலது பக்கம் திரும்ப வேண்டும்... எதற்காக நேராகப் போகிறீர்கள்?” என்று முடிந்த வரை தன் நடுக்கத்தை மறைத்த குரலில் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தானுமில்லை. பதில் சொன்னானுமில்லை.
“உங்களைத்தான்... எதற்காக நேராகச் செல்கிறீர்கள்? தயவுசெய்து வண்டியைத் திருப்புங்கள்” என்றவளுக்கு இப்போது இயலாமையில் கண்ணீர் வேறு வரத் தொடங்கியது. அவனோ அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் பாதையில் கவனத்தைச் செலுத்தியவாறு,
“நான் உன்னை என் வீட்டிற்குக் கடத்திக் கொண்டு போகிறேன் விதற்பரை...” என்றதும் இவளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது. பேச சக்தி இழந்தவளாக அவனை வெறித்தாள். இதயமோ இந்த கணமே நின்றுவிடுவேன் என்று அச்சுறுத்தியது. அச்சம் பிடரியில் அடிக்க,
“எ... என்.. என்னது... கட... கடத்திக்கொண்டு... போ... போகிறீர்களா...?” என்றாள் பெரும் கிலியுடன்.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது,
“பார்க்க எப்படித் தெரிகிறது...” என்றான்.
“நோ... நோ... ப்ளீஸ்... என்னை விட்டு விடுங்கள்... நான் வீட்டிற்குப் போகவேண்டும்...” கெஞ்சியவளுக்குத் தொண்டை அடைத்தது.
“விடுவதா...? இத்தனை அழகாக இருக்கிறாய்...! உன்னை எப்படிச் சும்மா விடுவேன்? அதுவும் பெண்களைக் கண்டால் பாய்ந்து கற்பழித்துவிடக் கூடியவன் நான்... உன்னைப் போன்ற அழகிகளை எப்படி விட்டு வைப்பேன்? வாய்ப்பேயில்லை...” என்றதும், இவளுடைய முகம் முழுதாக இரத்தப் பசையை இழந்தது. பயத்தில் காதுகள் அடைத்துக் கொண்டு வந்தன. எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவள் போல அவனைப் பரிதாபமாகப் பார்க்க, அதுவரை இறுக்கமாக நின்றிருந்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பக்கென்று சிரித்துவிட்டான்.
இவளோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளி வராமல்,
“நா... நான்... நீ... நான்...” என்று குழற, மேலும் விரிந்த புன்னகையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“கூல் விதற்பரை... நிறையப் பெண்களோடு படுக்கையைப் பகிர்ந்திருக்கிறேன் தான். அதற்காகக் காமுகன் அல்ல... என்னை நாடி வரும் பெண்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் தொடுவதில்லை... நீயாக என்னிடம் வரும் வரைக்கும் நானாக உன்னை நெருங்கமாட்டேன்... ஐ ப்ராமிஸ் யு...” என்றதும் அவளுக்குப் பயம் மறைந்து ஆத்திரம் பெருகியது.
கொஞ்ச நேரத்தில் எப்படி அலறவைத்து விட்டான். இப்போதும் அந்தப் பயத்தின் எச்சம் இருந்து வியர்த்துக் கொட்ட வைக்கிறதே. வழிந்த வியர்வையைத் துடைத்தவாறு சீற்றம் பொங்க,
“ஹெள டெயர் யு... எத்தனை தைரியமிருந்தால் என்னுடைய அனுமதியில்லாது எங்கோ அழைத்துச் செல்வீர்கள்... மரியாதையாக வாகனத்தைத் திருப்புங்கள்... இல்லை...” என்று கொதிப்புடன் சீற, இப்போதும் தன்னுடைய புன்னகையை மாற்றாமல், அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான்.
“எதற்கு இத்தனை கோபம்...?” என்றவன் வாகனத்தை இடது பக்கமாக ஒடித்துத் திரும்ப, விதற்பரைக்குச் சர்வ நாடியும் அடங்கிப்போனது.
விஜயமலர்:

Uploaded files: