Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

வா.. வா.. கருப்பா! - விபா விஷா

வணக்கம் தோழிகளே! 

 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

இந்த நாள்ல தொடங்கற எல்லாமே ரொம்ப நல்லபடியா வளரும்னு சொல்லுவாங்க.. அதனால இன்னைக்கு ஒரு புதிய அறிவிப்பு!

 

ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சுட்டு இருந்த கதை.. அதாவது ஏற்கனவே என்னை பாதிச்ச ஒரு கதையைத் தழுவி நான் எழுதணும்னு நினைச்ச கதையை இன்னைல இருந்து தொடங்கப்போறேன்..

 

சின்ன வயசுல அம்மா சமைக்கறத பார்த்து நாமளும் சமையல் செஞ்சு விளையாடற மாதிரி.. அப்பாவோட மீசை தாடி எல்லாம் பார்த்து, நாமும் பென்சிலால் மீசை, தாடின்னு வரைஞ்சுக்கற மாதிரியான ஒரு முயற்சி தான் இந்தக் கதை!

 

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச எழுத்தாரனான இந்திரா சௌந்தரராஜன் அவர்களோட எழுத்துல, நாகா அவர்களோட இயக்கத்துல உருவான விடாது கருப்பு தொடர் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. ஹப்பா எப்படி யோசிச்சிருக்காங்கல்லன்னு பல முறை பிரம்மிச்சுப் போயிருக்கேன்.. 

 

அந்த பிரம்மிப்போட விளைவு தான்.. "வா.. வா.. கருப்பா!"

 

இது அந்தக் கதையோட தொடர்ச்சியா.. இல்லை, வேற மாதிரியான்னு எதுவும் இப்போ நான் சொல்லப் போறது கிடையாது!

 

ஆனா கதையோட ஹீரோ "கருப்பு" தான்!

 

கதை ஒவ்வொரு எபிசோடா கிண்டில்ல வரும்..

 

இனி.. கதைல இருந்து ஒரு குட்டி டீசர்..

 

"கருப்பு வரும்..

 

வந்து என்ன கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கும்.." என்று அவள் அன்று கூறிய அந்தக் கடைசி வாக்கியம் இன்னமும் அந்தப் பிராந்தியத்தையே சுற்றி வருவது போலிருந்தது ரங்கசாமிக்கு.

 

அந்தக் கல்லறையையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்திருந்தவன், ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அவன் வீடு நோக்கி நடந்தான்.

 

சுற்றிலும் சூழ்ந்த இருளில் செல்லியின் நினைவுகளே அவன் மனதில் படிந்திருந்தது.

 

"எவ்வளவு வெள்ளந்தியான பொண்ணு அது? அதுக்கு இந்தக் கொடுமையெல்லாம் நடந்திருக்கவே கூடாது.." என்று தனக்குள்ளாகக் கூறிக் கொண்டவனின் சிந்தனையைத் தடுத்தது தூரத்தில் கேட்ட குதிரையின் கனைப்பொலி!

 

அந்த ஒளியைக் கேட்டதுமே அவன் மனதுக்குள் ஒரு விதிர்ப்பு!

 

"கருப்பா.." என்று அவன் வாய் தானாகவே முணுமுணுக்க, நொடியில் வியர்வையில் குளித்தது அவன் நெற்றி!

 

தோளில் கிடந்த துண்டை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டவன், வேகவேகமாகத் துண்டை வீசியபடி நடக்கத் துவங்கினான்.

 

வானத்தில் மேகங்கள் ஒன்றோடொன்று உரசி மின்னலைத் தோற்றுவித்துக் கொண்டிருக்க, சீக்கிரத்தில் மழை பிடித்துக் கொள்ளும் என்பதும் சேர்ந்து கொள்ள, ரங்கசாமியின் நடையின் வேகம் அதிகமெடுத்தது.

 

அப்பொழுது அந்த ஊரே அதிரும்படிக்கு, பார்வையைப் பறிக்கும் படிக்குப் பலமான அதிர்வில் ஒரு மின்னல் அந்த இருள் பிரதேசத்தையே வெளிச்சத்தில் மூழ்கடிக்க, அதைப் பார்க்க இயலாமல் கண்களை மூடிக் கொண்டான் அவன்.

 

அதைத் தொடர்ந்து வானம் கிடுகிடுத்து ஒரு பேரிடியின் சத்தம் கேட்க, ரங்கசாமிக்கு அவன் காதே செவிடாகிவிட்டதோ என்னும் அளவுக்கு அதிர்வைக் கொடுத்தது அந்த இடி.

 

அவன் மீண்டும் கண்களைத் திறக்கையில் தூரத்தில் ஒரு வீட்டின் தென்னை மரத்தில் அந்த இடி விழுந்திருந்தது!

 

"அய்யோ.. நம்ம முத்துப்பாண்டி வீட்டு தென்னை மரத்துல இடி விழுந்துடுச்சே.." என்று பதறியபடி அவன் அங்கே ஓட, அவனுடன் சேர்ந்து அந்தக் காட்சியைத் தங்கள் வீடுகளிலிருந்து பார்த்த மற்ற மக்களும் முத்துப்பாண்டியின் வீட்டை நோக்கி ஓடினர்.

 

கிண்டில் லிங்க் : 

https://amzn.to/4cXsOCR

- விபா விஷா!

 

Uploaded files:
  • FB_IMG_1713074428873.jpg