Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ரியா மூர்த்தி

ரியா மூர்த்தி :
சிறு துகள் ரணங்கள்
கதையிலிருந்து சிறு துளி...
வளையம் வளையமாக புகை விட்டபடி உள்ளே நுழைந்தான் கௌதம்.
பெயருக்கும் அவனுக்கும் துணி கூட சம்பந்தம் கிடையாது. பொறுமை என்றால் எத்தனை கிலோ என்று கேட்பவன். மெதுவாக பேசவே தெரியாத அரக்கன். அவன் இதழ் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிறரை காயப்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும்.
அப்பேர்பட்டவனுக்கு பத்து வார்த்தை சேர்த்து பேச தெரியாத இந்த சத்யா தான் ஜென்ம விரோதி என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை...
"ஒன்னுக்கு பத்து தடவை சொல்லியும் உனக்கு புரிய மாட்டேங்குது இல்ல? எந்த தைரியத்துல மாலையும் கழுத்துமா இங்க வந்து உட்கார்ந்த?"
"தம்பி அவளுக்கு நேத்து ராத்திரி வரைக்கும் இன்னிக்கி கல்யாணம்ன்ற விஷயமே தெரியாது. என் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா அவளை மன்னிச்சு விட்டுடுங்க. இனிமே நானும் என் பொண்ணும் வாழ்க்கை முழுக்க உங்க கண்ணுல படவே மாட்டோம். இந்த ஒரு வாட்டி எங்க மேல இரக்கம் காட்டுங்க தம்பி. உங்க கால்ல வேணாலும் விழுறேன்."
தன் வயதை பற்றிய நினைப்பே இல்லாமல் அவன் காலில் விழுந்து விட்டார் சத்யாவின் அன்னை.
"இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு என்னால மன்னிக்க முடியாத தப்ப பண்ணிட்டு, ஈஸியா விட்டுட சொல்றீங்க. டேய், இந்த அறுவைய அந்த பக்கமா இழுத்துட்டு போ. அவங்க பொண்ணு கல்யாணத்தை கண் குளிர பார்க்கட்டும்" என்றவன் தாலியை தன் கையில் எடுத்திருந்தான்.
சத்ய ஜீவிதா பயந்தபடியே பின்னால் நகர்ந்தாள். பத்துக்கு பத்தடி இருக்கும் கோவிலுக்குள் எவ்வளவு தூரம் தான் தப்பி ஓட முடியும்?
அழுது கொண்டே, "என்ன விட்டுருங்க சார்" என கரம் குவித்து கெஞ்சினாள்...
"டேய், இன்னொன்னு ஆரம்பிக்குது பாரு..." என்று கூப்பிட்டதும், அந்த ஏழடி எருமை தன் முதுகில் இருந்த திருப்பாச்சி அருவாளை சாந்தியின் கழுத்தில் வைத்தான்.
"அம்மாவை ஒன்னும் பண்ணிடாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்" வேகவேகமாய் அவன் முன்னால் வந்தாள் சத்ய ஜீவிதா.
ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டி விட்டான் கௌதம்.
 
May be an image of 1 person, smiling and text that says 'ரூ. ந.40 40 புத்தம்- பத்தம்-புதிய-களமை-நாவல் புதிய இளமை நாவல் យ மூர்த்தி தாமரைக் ลอน่าียส์สสวกยจา கொடி மாத நாவல் சிறு துகள் ரணங்கள்...'