Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார் :
உச்சிமலைச் சித்தர் அந்த சப்தகிரி காட்டு அருவியில் நீராடி முடித்து வேறு செங்காவி ஆடை அணிந்தபோது, கதிரவன் கிழக்குத் திசையைக் கீறி சிவப்பாக்கியிருந்தான். நெருக்கியடித்து வளர்ந்திருந்த மரங்களில் பறவைகள் கூச்சலிட, சிங்கமுக குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. புற்களின் தலைகளில் இன்னமும் பனிக் கிரீடங்கள். காற்றில் இன்னமும் இரவுக்குளிர்.
தன் குடிலை நோக்கி சித்தர் நடக்கத் துவங்க, தள்ளி பவ்யமாய் நின்றிருந்த அந்த ஐந்து சீடர்களும் நெருங்கி வந்து அவரைத் தொடர்ந்தார்கள்.
உச்சிமலைச் சித்தர்க்கு கணிக்க முடியாத வயது. சுருக்கம் துளியும் இல்லாத முகம். பால்போன்ற வெண்மையில் பளீரென்ற தாடி. தாடியை வைத்து வயதை தீர்மானிக்கலாம் என்று நினைத்தால் வாரி முடித்த தலைமுடி கரியைப் போல் கறுப்பாய் தெரிந்தது. ஒரு முப்பது வயது இளைஞனுக்கு இருப்பது போன்ற வலிமையான தோள்கள். கழுத்தில் ஊசலாடும் தங்கத்தில் கோர்த்த ருத்திராட்சக் கொட்டைகள், கண்களில் வித்தியாசமான ஒளியோடு தீட்சண்யம் தெரிந்தது....
மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்
 
 
அத்தியாயம் 1