எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்அமேசான் புது வரவுராஜி
ராஜி
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · April 26, 2024, 9:47 pm
Quote from Pengal Thalam on April 26, 2024, 9:47 pmஹாய் பிரெண்ட்ஸ்..தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கதையை அமேசானில் பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் இருக்கிறவங்க இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.இது 18+ content கதை.. கவனிக்கவும் content மட்டுமே..ஹர்திக் மற்றும் ஜான்வியை படித்தவங்க மறந்திருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.காதல் என்ற பெயரில் சுயவொழுக்கம் தவறியதால்.. இருவரும் சந்திக்கும் பிரச்சினைகளும்.. அவர்கள் படும் துயரங்களும் பல! அவற்றை கடந்து அவர்கள் இணைந்தார்களா.. என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.மறக்காமல் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.கதையில் இருந்து சிறு பகுதி..**************உறுதியுடன் நிமிர்ந்து “ஹர்திக்! போதும் நாம் இனி மீட் செய்ய வேண்டாம்.” என்றாள்.ஹர்திக் புருவத்தை உயர்த்தி பார்க்கவும், ஜான்வி மனதிற்குள் ‘வாயைத் திறந்து ஏன் என்றுக் கேட்க மாட்டாரோ! இவர் புருவத்தை கேள்வியா உயர்த்துவதை வைச்சு.. நாமளே சொல்லணுமோ..’ என்றுப் பொருமி விட்டு “எனக்கு நீ ஒத்து வரலை. நம்ம கிட்ட நிறையா டிப்ரென்ஸ் இருக்கு! இப்படி எனக்கு செட் ஆகாதா.. உன்னோட எதுக்கு சேர்ந்துட்டு! அதுதான் போதும்.. இத்தோட முடிச்சுக்கலான்னு சொல்றேன்.” என்றாள்.அவள் கூறி முடிக்கும் வரை.. சிறு யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹர்திக் “பட் ஐ வான்(ட்) டு ஸ்டிக் வித் யு..” என்றான்.ஜான்வி “பட் ஐ கான்ட்! சோ நாம இப்படியே பிரியறது தான் நல்லது.” என்றாள்.அதற்கு ஹர்திக் நின்றிருந்த பைக்கை முடுக்கிவிட்டு “ஐம் நாட் அக்ரீ வித் தி(ஸ்)! கமான் சிட்..” என்றான்.அவள் கூறியதை மதிக்காது பைக்கில் ஏறக் கூறியவனை திகைப்புடன் பார்த்த ஜான்வி, சற்று கோபத்துடன் “ஸாரி ஹர்திக்! இதைத் தான் சொன்னேன். நான் ஒண்ணு சொல்லிட்டு இருக்கேன். நீ ஒண்ணு சொல்லிட்டு இருக்கே! சோ பை..” என்றுவிட்டு தொடர்ந்து நடந்தாள். ஆனால் சட்டென்று பைக்கை அவளுக்கு முன் நிறுத்திய ஹர்திக் “உன் கூட ஸ்பென்ட் செய்த.. இந்த சிக்ஸ் டேஸ்.. எனக்கு வேஸ்ட் ஆஃப் டைம் ஆக இருக்க கூடாது.” என்றான்.அதைக் கேட்ட ஜான்வி “உனக்கு என்ன வேணும்?” என்றுக் கேட்டாள்.அதற்கு ஹர்திக் “வொர்க் முடிந்ததும் வந்து பிக்அப் செய்துக்கிறேன். பப்பிற்கு போகலாம். தென் நாளையில் இருந்து கட் ஆஃப் செய்துக்கலாம்.” என்றான்.ஜான்வி “நான் உன் கூட அந்த மாதிரி இடத்திற்கு எல்லாம் வர முடியாது. இதை முதன் முதலா நாம் பாய்பிரெண்ட் கேர்ள் பிரெண்ட் அக்ரீமென்ட் போடும் போதே சொல்லிட்டேன்.” என்றாள்.அதற்கு ஹர்திக் “லிசன் கேர்புல்லி! உன் கூட ஸ்பென்ட் செய்த.. சிக்ஸ் டேஸிற்கு எனக்கு பெனிஃபீட் வேண்டும். நவ் யு அன்டர்ஸ்டென்ட்! இல்லை இன்னும் ஓப்பனா சொல்லவா..” என்றுக் கேட்டான்.---------------எலக்ட்ரோ ட்ரெயின் பிடித்து.. தனது மருந்தகம் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.அவன் ஏறியதும்.. அமர்வதற்கு இடம் கிடைக்கவும், அமர்ந்துக் கொண்டு தனது செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான். மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு திரும்பிப் பார்க்காமலேயே அவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றுத் தெரிந்தது. அவனையும் அறியாது.. அவனது நினைவுகள்.. இதுபோல் அவனை ஆர்வத்துடன் பார்க்கும் பெண்களைத் தன் வசப்படுத்தியது நினைவிற்கு வந்தது.அன்று ஏதோ பெரிய செருக்கான விசயமாக தெரிந்தது. தற்பொழுது மிகவும் கேவலமாக தெரிந்தத.எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்த பொழுது.. அந்த பெண்ணே எழுந்து.. வேறு ஒருவர் அமர்வது தெரியவும், சிறு நிம்மதியுடன் தலையைத் திருப்பிப் பார்த்தான். ஆனால் அவனோ ஹர்திக்கை பார்த்து முறைத்தான். அதிலேயே அவன் அந்த பெண்ணின் காதலன் அல்லது கணவன் என்றுத் தெரிந்தது.இயல்பாக பார்த்தால்.. இது நகைச்சுவையாக பார்க்கப்படுவது. இன்னொருத்தனின் பெண்.. அவனை விட்டு மற்றவனை சைட் அடித்தால்.. அதைப் பார்த்து சிரிப்பார்கள்.ஆனால்.. ஹர்திக்கிற்கு சுருக்கென்று இதயத்தில் வலித்தது. இன்னொருத்தரின் பெண்ணை அபகரிக்கும் காமுகன் மாதிரியா தெரிகிறான். அவன் அப்படிப்பட்டவன் அல்ல.. என்று அலற வேண்டும் போன்று இருந்தது. சட்டென்று அங்கிருந்து எழுந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.-----------ஜான்வி அவனை நோக்கி வரும் பொழுதே “நீ இங்கே வருவேன்னு நினைச்சு பார்க்கலை ஹர்திக்..” என்றவாறு வந்தாள்.அதற்கு ஹர்திக் “அதாவது எதுக்கு வந்தேன்னு கேட்கிறே..” என்றான்.அதற்குள் அருகில் வந்திருந்த ஜான்வி மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு “எக்ஸாட்டிலி..” என்றாள்.ஹர்திக் “நீ வர மாட்டேன்னு தெரியும். அதுதான் கொஞ்சம் கிளியர் செய்துக்கலான்னு நானே வந்தேன்.” என்றான்.உடனே ஜான்வி “வேண்டாம்..” என்று கையை உயர்த்தினாள். பின் “வேண்டாம் ஹர்திக்! நமக்குள்ள எந்த கிளியரும் வேண்டாம். எந்த ஆறுதலும் வேண்டாம். நாம கப்புள்ளா இருந்ததால் எவ்வளவு பெரிய பிராப்ளம்ஸ் பேஸ் செய்தோம்.. என்றுத் தெரியும். இப்போ பிரெண்ட்ஸாக இருக்கலாம் என்றுப் பார்த்தால்.. இதுவும் நமக்கு செட் ஆகலைனு புரியுது. கம்பர்ட் செய்யறதா நினைச்சு.. பழசை பேசி.. மறுபடியும் பெயின் அதிகமான மாதிரி தான் இருக்கு! அதனால்.. நாம் இப்படியே விட்டராலாம். இங்கே உன்னை மறுபடியும் மீட் செய்யாத வரை நான் பழசை பற்றியெல்லாம் நினைச்சு பார்க்கலை. பார்த்ததால் தான் இத்தனை வினை..! நாம் ஒரு அன்பார்ச்சுனெட் பீப்பிள்! தட்ஸ் ஆல்! அந்த விதி மறுபடியும் நம்மளை மீட் செய்ய வைத்தாலும்.. உன்னையும் நானும் என்னை நீயும் கடந்து விட வேண்டும் என்று மட்டும் மனதில் உறுதியா வச்சுக்கலாம்.” என்றாள்.அவள் பேசி முடிக்கும் வரை கேட்ட ஹர்திக் “ஏன் வான்ட்டர்டா.. நம்மளோட மீட்டிங்கை இவ்வளவு பெரிய இஷ்ஷுவா ஆக்கறே..” என்றுச் சரியான பாயின்ட்டை பிடித்தான்.அவனது கூர்மையான பதிலால் ஓய்ந்த ஜான்வி “அதுதான் தெரியுதுல்ல விட்டுரு..” என்றாள்.ஹர்திக் “முடியாது நிவி! எனக்கு உன்கிட்ட இருந்து பதில் கிடைக்காமல் விட முடியாது நிவி! நேத்து நீ வரிசையா கேட்ட கேள்விக்கு அர்த்தம் புரிந்து தான் கேட்டியா?” என்றுக் கேட்டான்.ஜான்வி “அப்படி என்ன அர்த்தத்தைக் கண்டுட்டே?” என்றுச் சற்று எரிச்சலுடன் கேட்டாள்.ஹர்திக் “டு யு லவ் மீ?” என்றுப் பட்டென்று கேட்டான்.ஜான்வி அமைதியாக முறைக்கவும், ஹர்திக் “அம் ஐ லவ் வித் யு?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.இந்தியா லின்க்..https://amzn.to/4ddwJf8வெளிநாட்டு வாசகிகளுக்கான லின்க்..
ஹாய் பிரெண்ட்ஸ்..
தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கதையை அமேசானில் பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் இருக்கிறவங்க இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.
இது 18+ content கதை.. கவனிக்கவும் content மட்டுமே..
ஹர்திக் மற்றும் ஜான்வியை படித்தவங்க மறந்திருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.
காதல் என்ற பெயரில் சுயவொழுக்கம் தவறியதால்.. இருவரும் சந்திக்கும் பிரச்சினைகளும்.. அவர்கள் படும் துயரங்களும் பல! அவற்றை கடந்து அவர்கள் இணைந்தார்களா.. என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மறக்காமல் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.
கதையில் இருந்து சிறு பகுதி..
**************
உறுதியுடன் நிமிர்ந்து “ஹர்திக்! போதும் நாம் இனி மீட் செய்ய வேண்டாம்.” என்றாள்.
ஹர்திக் புருவத்தை உயர்த்தி பார்க்கவும், ஜான்வி மனதிற்குள் ‘வாயைத் திறந்து ஏன் என்றுக் கேட்க மாட்டாரோ! இவர் புருவத்தை கேள்வியா உயர்த்துவதை வைச்சு.. நாமளே சொல்லணுமோ..’ என்றுப் பொருமி விட்டு “எனக்கு நீ ஒத்து வரலை. நம்ம கிட்ட நிறையா டிப்ரென்ஸ் இருக்கு! இப்படி எனக்கு செட் ஆகாதா.. உன்னோட எதுக்கு சேர்ந்துட்டு! அதுதான் போதும்.. இத்தோட முடிச்சுக்கலான்னு சொல்றேன்.” என்றாள்.
அவள் கூறி முடிக்கும் வரை.. சிறு யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹர்திக் “பட் ஐ வான்(ட்) டு ஸ்டிக் வித் யு..” என்றான்.
ஜான்வி “பட் ஐ கான்ட்! சோ நாம இப்படியே பிரியறது தான் நல்லது.” என்றாள்.
அதற்கு ஹர்திக் நின்றிருந்த பைக்கை முடுக்கிவிட்டு “ஐம் நாட் அக்ரீ வித் தி(ஸ்)! கமான் சிட்..” என்றான்.
அவள் கூறியதை மதிக்காது பைக்கில் ஏறக் கூறியவனை திகைப்புடன் பார்த்த ஜான்வி, சற்று கோபத்துடன் “ஸாரி ஹர்திக்! இதைத் தான் சொன்னேன். நான் ஒண்ணு சொல்லிட்டு இருக்கேன். நீ ஒண்ணு சொல்லிட்டு இருக்கே! சோ பை..” என்றுவிட்டு தொடர்ந்து நடந்தாள். ஆனால் சட்டென்று பைக்கை அவளுக்கு முன் நிறுத்திய ஹர்திக் “உன் கூட ஸ்பென்ட் செய்த.. இந்த சிக்ஸ் டேஸ்.. எனக்கு வேஸ்ட் ஆஃப் டைம் ஆக இருக்க கூடாது.” என்றான்.
அதைக் கேட்ட ஜான்வி “உனக்கு என்ன வேணும்?” என்றுக் கேட்டாள்.
அதற்கு ஹர்திக் “வொர்க் முடிந்ததும் வந்து பிக்அப் செய்துக்கிறேன். பப்பிற்கு போகலாம். தென் நாளையில் இருந்து கட் ஆஃப் செய்துக்கலாம்.” என்றான்.
ஜான்வி “நான் உன் கூட அந்த மாதிரி இடத்திற்கு எல்லாம் வர முடியாது. இதை முதன் முதலா நாம் பாய்பிரெண்ட் கேர்ள் பிரெண்ட் அக்ரீமென்ட் போடும் போதே சொல்லிட்டேன்.” என்றாள்.
அதற்கு ஹர்திக் “லிசன் கேர்புல்லி! உன் கூட ஸ்பென்ட் செய்த.. சிக்ஸ் டேஸிற்கு எனக்கு பெனிஃபீட் வேண்டும். நவ் யு அன்டர்ஸ்டென்ட்! இல்லை இன்னும் ஓப்பனா சொல்லவா..” என்றுக் கேட்டான்.
---------------
எலக்ட்ரோ ட்ரெயின் பிடித்து.. தனது மருந்தகம் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.
அவன் ஏறியதும்.. அமர்வதற்கு இடம் கிடைக்கவும், அமர்ந்துக் கொண்டு தனது செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான். மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு திரும்பிப் பார்க்காமலேயே அவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றுத் தெரிந்தது. அவனையும் அறியாது.. அவனது நினைவுகள்.. இதுபோல் அவனை ஆர்வத்துடன் பார்க்கும் பெண்களைத் தன் வசப்படுத்தியது நினைவிற்கு வந்தது.
அன்று ஏதோ பெரிய செருக்கான விசயமாக தெரிந்தது. தற்பொழுது மிகவும் கேவலமாக தெரிந்தத.
எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்த பொழுது.. அந்த பெண்ணே எழுந்து.. வேறு ஒருவர் அமர்வது தெரியவும், சிறு நிம்மதியுடன் தலையைத் திருப்பிப் பார்த்தான். ஆனால் அவனோ ஹர்திக்கை பார்த்து முறைத்தான். அதிலேயே அவன் அந்த பெண்ணின் காதலன் அல்லது கணவன் என்றுத் தெரிந்தது.
இயல்பாக பார்த்தால்.. இது நகைச்சுவையாக பார்க்கப்படுவது. இன்னொருத்தனின் பெண்.. அவனை விட்டு மற்றவனை சைட் அடித்தால்.. அதைப் பார்த்து சிரிப்பார்கள்.
ஆனால்.. ஹர்திக்கிற்கு சுருக்கென்று இதயத்தில் வலித்தது. இன்னொருத்தரின் பெண்ணை அபகரிக்கும் காமுகன் மாதிரியா தெரிகிறான். அவன் அப்படிப்பட்டவன் அல்ல.. என்று அலற வேண்டும் போன்று இருந்தது. சட்டென்று அங்கிருந்து எழுந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.
-----------
ஜான்வி அவனை நோக்கி வரும் பொழுதே “நீ இங்கே வருவேன்னு நினைச்சு பார்க்கலை ஹர்திக்..” என்றவாறு வந்தாள்.
அதற்கு ஹர்திக் “அதாவது எதுக்கு வந்தேன்னு கேட்கிறே..” என்றான்.
அதற்குள் அருகில் வந்திருந்த ஜான்வி மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு “எக்ஸாட்டிலி..” என்றாள்.
ஹர்திக் “நீ வர மாட்டேன்னு தெரியும். அதுதான் கொஞ்சம் கிளியர் செய்துக்கலான்னு நானே வந்தேன்.” என்றான்.
உடனே ஜான்வி “வேண்டாம்..” என்று கையை உயர்த்தினாள். பின் “வேண்டாம் ஹர்திக்! நமக்குள்ள எந்த கிளியரும் வேண்டாம். எந்த ஆறுதலும் வேண்டாம். நாம கப்புள்ளா இருந்ததால் எவ்வளவு பெரிய பிராப்ளம்ஸ் பேஸ் செய்தோம்.. என்றுத் தெரியும். இப்போ பிரெண்ட்ஸாக இருக்கலாம் என்றுப் பார்த்தால்.. இதுவும் நமக்கு செட் ஆகலைனு புரியுது. கம்பர்ட் செய்யறதா நினைச்சு.. பழசை பேசி.. மறுபடியும் பெயின் அதிகமான மாதிரி தான் இருக்கு! அதனால்.. நாம் இப்படியே விட்டராலாம். இங்கே உன்னை மறுபடியும் மீட் செய்யாத வரை நான் பழசை பற்றியெல்லாம் நினைச்சு பார்க்கலை. பார்த்ததால் தான் இத்தனை வினை..! நாம் ஒரு அன்பார்ச்சுனெட் பீப்பிள்! தட்ஸ் ஆல்! அந்த விதி மறுபடியும் நம்மளை மீட் செய்ய வைத்தாலும்.. உன்னையும் நானும் என்னை நீயும் கடந்து விட வேண்டும் என்று மட்டும் மனதில் உறுதியா வச்சுக்கலாம்.” என்றாள்.
அவள் பேசி முடிக்கும் வரை கேட்ட ஹர்திக் “ஏன் வான்ட்டர்டா.. நம்மளோட மீட்டிங்கை இவ்வளவு பெரிய இஷ்ஷுவா ஆக்கறே..” என்றுச் சரியான பாயின்ட்டை பிடித்தான்.
அவனது கூர்மையான பதிலால் ஓய்ந்த ஜான்வி “அதுதான் தெரியுதுல்ல விட்டுரு..” என்றாள்.
ஹர்திக் “முடியாது நிவி! எனக்கு உன்கிட்ட இருந்து பதில் கிடைக்காமல் விட முடியாது நிவி! நேத்து நீ வரிசையா கேட்ட கேள்விக்கு அர்த்தம் புரிந்து தான் கேட்டியா?” என்றுக் கேட்டான்.
ஜான்வி “அப்படி என்ன அர்த்தத்தைக் கண்டுட்டே?” என்றுச் சற்று எரிச்சலுடன் கேட்டாள்.
ஹர்திக் “டு யு லவ் மீ?” என்றுப் பட்டென்று கேட்டான்.
ஜான்வி அமைதியாக முறைக்கவும், ஹர்திக் “அம் ஐ லவ் வித் யு?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.
இந்தியா லின்க்..
வெளிநாட்டு வாசகிகளுக்கான லின்க்..
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 156,037