Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராஜி

ஹாய் பிரெண்ட்ஸ்..

 

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥭🍍🍇

 

இந்த நாளில் அமேசானில் புதிதாக ஆன்லைன் சீரிஸ் போட்டிருக்கேன்.

 

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!"

 

இன்னைக்கு கொடுக்கணும் என்று நேத்து சாயந்திரம் அவசரம் அவசரமாக டைப் செய்தது. சோ சின்னது தான்.. அடுத்த பாகம் அடுத்த ஞாயிறு தரும்போது‌.. பெரிதாக தருகிறேன் 

 

இதோ அமேசான் லின்க்..

 

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ! 1 (Tamil Edition) https://amzn.in/d/dYr5Cr5

 

சின்ன பகுதி..

 

 கௌதம் “உங்களுடையது.. அப்பறம் ப்ரணவ்வோட ஐடென்டியை நான் பார்க்கலாமா!” என்றுக் கேட்டான்.

 

கௌதம் எதற்கு கேட்கிறான் என்று அந்த பெண்ணிற்கு புரியவில்லை. புருவம் சுருங்க பார்த்தவளுக்கு.. பின்பே அர்த்தம் புரியவும், கோபத்திலும்.. அழுகையிலும் மூக்கு விடைக்க.. அவசரமாக தனது தோளில் மாட்டியிருந்த க்ராஸ் பேக்கின் ஜீப்பை திறந்தாள்.

 

அதில் இருந்த கார்ட்டை வாலெட்டை எடுத்தவள் “பாருங்க! நான்.. மிஸஸ் ஆர்த்தி தியாகு!” என்று ஆதார் அட்டை மற்றும்.. பாஸ்புக்கை எடுத்துக் காட்டினாள். 

 

பின் “இவன் என் மகன் ப்ரணவ் தியாகு! இது அவனோட ஐடிடென்டி கார்ட்ஸ்.. பாருங்க! ஃபோட்டோஸ் கூட இருக்கு..” என்று க்ராஸ் பேக்கில் கையை விடவும், கௌதமிற்கு சங்கடமாகி போனது.

 

“இட்ஸ் ஒகே மேம்! அன்ட் ரியலி ஸாரி..” என்பதற்குள்.. கொத்தாக அவள் எடுத்த படங்கள் மற்றும் இதர முக்கியமான காகிதங்கள், அடையாள அட்டை, சிறு பணக்கட்டு, கிரிடிட் கார்ட்ஸ் போன்றவை சிதறி கீழே விழுந்தன.

https://amzn.to/4cUnKPQ