Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

பிரவீணா தங்கராஜ்

பிரவீணா தங்கராஜ்

Hello Readers,
Praveena Thangaraj Novels site ல Mark-2024 அதாவது முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் -2024 போட்டி இந்த மாதம் முடிவடையும்‌.
என்னோட தளத்தில் கால நீட்டிப்பு கிடையாது. அதே போல சொன்ன சொல்படி முடிவும் அறிவிப்பேன்.
படிக்க விரும்பறவங்க வாசிங்க. கதைகள் போட்டி முடிந்து வெற்றி பட்டியல் அறிவித்தப் பிறகு மே மாதம் முழுக்க, சரியாக ஒரு மாதம் மட்டுமே தளத்தில் இருக்கும்.
எழுத்தாளர் விருப்பப்பட்டா மட்டும் தளத்தில் இருக்கும். அதை தவிர நீக்க சொன்னால் கதையை நீக்கிடுவேன்.
எல்லா தளத்திலும் வேறுபாட்டு காணாமல் படிக்கும் வாசகர்கள் வாசித்து விடுங்க.
போட்டியில் இப்பொழுது தான் எழுத வந்த சிலரும் இருக்காங்க. சிலர் புத்தகம் போட்ட வளர்ச்சி அடைந்த எழுத்தாளரும் இருக்காங்க.
இதை ஏன் குறிப்பிடறேன் என்றால் ஆப்பில் எழுதியவர்களுக்கு தளத்தில் எழுதுவது புதிது‌. கொஞ்சம் தடுமாறுகின்றார்கள். நாமளே தடுமாற்றத்தில் இருந்து தான் நேர்பட நடக்க கற்றவர்கள். அதனால் (எழுத்து)நடையில் எவ்வாறு அடியெடுத்து வைக்க என்று சிலர் பயந்து எழுதுகின்றார்கள். அவர்களிடம் கூறியது ஒன்றே ஒன்று தான். இது ஆரம்பகால தடுமாற்றம். பிழையை தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு மட்டுமே. அஞ்சாமல் எழுதுங்க. கதை கான்செப்ட் தான் நான் மதிக்கிறேன். நிறை குறை பதமாக சொல்பவரிடம் செவிமடுங்கள் என்பதே.
மற்றபடி ஏற்கனவே தளத்தில் எழுதி கெஸ்ட் ரைட்டர் இங்கே கலந்து உள்ளவர்கள் உங்கள் சாமர்த்தியத்தில் கண்டறிந்து பாருங்கள். ஆனா வாசித்தா தான் கண்டறிய முடியும்.
வாசகர்களில் சிலர் டேக் பண்ணுங்க வாசிக்கறோம்னு சொன்னிங்க. அடிக்கடி everyone tag போட தான் செய்தேன், செய்வேன்.
போட்டியில் பெயர் கொடுத்த ரைட்டர்ஸ் இதுவரை உங்கள் கதை பதியவில்லை என்றால் இனி பதிவிடுங்கள்.
அப்பறம் சைட்ல எல்லா போட்டிக்கதைக்கு கமெண்ட்ஸ் பண்ணற ரீடர்ஸ் பெயரை எல்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன்.
போட்டி முடிவுகள் வெளியிடும் நாளன்று வாசகர் பெயரையும் அறிவிக்கின்றேன்.
நன்றி,
பிரவீணா தங்கராஜ்
Competition completed novels👇
https://praveenathangarajnovels.com/.../mark-2024-%e0%ae.../
Competition story 👇
MARK-2024 போட்டி கதைகள் – Praveena Thangaraj Novels Forum

 

[ உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து, நீங்களே மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]