Forum

வணக்கம் தோழமைகளே! இந்த Forum பகுதியில் உங்கள் கதை தளத்தின் திரிகளையும், உங்கள் கருத்துக்களையும் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். நீங்கள் இங்கு ‘லாக் இன்’ செய்து பதிவிடுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : pengalthalam@gmail.com / தொலைபேசி எண் : 8825463689. நன்றி.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நித்யா மாரியப்பன்

நித்யா மாரியப்பன் :

 

#self_promotion_for_own_story #next_kindle_story

 

அடுத்த அமேசான் கதையில இருந்து snippet மக்களே 😍...

 

“இந்த மாஸ்க்மூஞ்சியோட ஒரே ரூம்ல இருக்குறதுக்குக் கொஞ்சம் பயமா தான் இருக்கு” என வாய்க்குள் முணுமுணுத்தாள் சாத்வி. அவள் எதிரே அமர்ந்திருந்தவன் என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.

 

“இந்த கறுப்பு மாஸ்கை எப்பவும் முகத்துலயே போட்டிருப்பிங்களா?” என கேட்டாள்.

 

“ஆமா”

 

“ஏன்? கொரியன் சீரிஸ் தாக்கமா?”

 

“இல்ல... கொரோனா தாக்கிடும்ங்கிற பயம்”

 

சாத்வி உதட்டைப் பிதுக்கினாள். இருப்பினும் முன் பின்னறியாதவனின் அறையில் அமர்ந்திருக்கும் தவிப்பு அவளது உடல்மொழியில் வெளிப்படுவதை அவன் கண்டுகொண்டான்.

 

முறுவலுடன் “யாருனு தெரியாத பையன் கூட ஒரே ரூம்ல இருக்கிறத நினைச்சு பயப்படுறியா? டோண்ட் வொரி... எனக்கு உன் மேல ‘அந்த’ மாதிரி எந்த இன்ட்ரெஸ்டும் வரல” என்றான் விசமமாக.

 

அது சாத்வியைத் தீண்டியிருக்கவேண்டும்.

 

“வாய்ப்பேச்சை எப்பிடி நம்புறது? Every man is a potential ra**p**is**t... வாய்ப்பு கிடைக்காத வரைக்கும் எல்லாரும் உத்தமன் தான்” என்று சூடாக பதிலடி கொடுத்தாள்.

 

இப்போது அவளது பேச்சு அவனைச் சீண்டிவிடவே அவனுடைய பதிலோ எரிமலைக்குழம்பின் வெம்மையோடு வந்தது.

 

“உன்னை மட்டும் நான் எப்பிடி நம்புறது? நீ நல்லப்பொண்ணு மாதிரி நடிச்சு, ஒரே ரூம்ல இவனோட இருந்தா ஏதாச்சும் கசமுசா நடக்கும், அதை மொபைல்ல, சீக்ரேட் கேமரால வீடியோவா எடுத்து காசு பறிக்கலாம்னு திட்டம் போட்டிருந்தா என் நிலமை என்னாகும்னு யோசி... Every woman is a potential go**ld di**g**ge**r”

 

அவன் கூறிய கோல்ட்-டிக்கர் என்ற வார்த்தையில் சாத்வி எக்கச்சக்கமாகக் காயப்பட்டுப்போனாள்.

 

“ஆமா! இவரு பெரிய வி.ஐ.பி, நாங்க இவர் கூட கசமுசா பண்ணி வீடியோ எடுக்க நினைக்குறோம்! ஏய் மிஸ்டர் ஸ்ட்ரேஞ்சர்! நீ உன்னைய ஆணழகன்னு நினைச்சிட்ட போல... எனக்கு உன் மேல எந்த இண்ட்ரஸ்டும் இல்ல, நீ சொல்லுற மாதிரி கேவலமான இண்டன்சனும் இல்ல” என கண்களை இறுக மூடிக்கொண்டு கத்தி தீர்த்தாள்.

 

அவனோ நீ கத்தியது என்னை பாதிக்கவில்லை என்ற ரீதியில் தோளை அசட்டையாகக் குலுக்கினான்.

 

“சொன்ன வார்த்தைய காப்பாத்துனா நல்லது” என்று சொல்லி சாத்வியை இன்னும் எரிச்சல் மூட்டிவிட்டு டீபாய் மீது கிடந்த டேபில் சமூக வலைதளங்களைப் பார்வையிடத் துவங்கினான்.

 

விரைவில் அமேசான் கிண்டிலில்....

 

 

Uploaded files:
  • FB_IMG_1712821797613.jpg