எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
காரிருள் சூழா காதலே! - எழிலன்பு
Quote from Pengal Thalam on April 14, 2024, 4:42 pmஎழிலன்பு
காரிருள் சூழா காதலே! கதை இப்போது அமேசான் கிண்டிலில்…
ஒரு காதலில் அடிவாங்கியவனுக்கு இன்னொரு காதல் இனிக்குமா? நாயகனுக்கு கசக்கவே செய்கிறது. காதலே வேண்டாம் என்று விலகி ஓடுபவனை தன் காதலால் கவர்ந்தாளா நாயகி???
கதையிலிருந்து…
தன் இருப்பிடம் வந்ததும் காரிலிருந்து இறங்கிய தூரிகா, “துருவ், கொஞ்சம் கீழே இறங்க முடியுமா?” என்று முன் பக்கம் இருந்தவனிடம் கேட்டாள்.
“என்ன விஷயம் தூரிகா? எதுவாக இருந்தாலும் நாளைக்கு ஆபிஸ் வாங்க, பேசிக்கலாம். இப்ப நேரமாச்சு. வீட்டுக்குப் போங்க…” என்று காரிலிருந்து இறங்காமல் சொன்னான்.
“இல்லை துருவ், ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்!” என்றாள்.
யோசனையுடன் துருவன் காரிலிருந்து இறங்க, நவீனும் உடன் இறங்க போனான்.
“நவீன், நீங்க உள்ளேயே இருங்க ப்ளீஸ்! நான் துருவ்கிட்ட தனியா பேசணும்…” என்றதும் அவன் உள்ளேயே அமர்ந்து கொண்டான்.
“அப்படி என்கிட்ட என்ன பேசணும் தூரிகா?” என்று துருவன் கேட்க,
“ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும் துருவ்…” என்றாள்.
“வெயிட்! என்ன இது புதுசா துருவ்? எல்லாரையும் போலத் துருவன்னு கூப்பிடுங்க…” என்றான் கண்டிப்புடன்.
“எல்லோரையும் போல் நானும் ஏன் அப்படிக் கூப்பிடணும் துருவ்?” என்று அவள் நிதானமாகக் கேட்க,
“வாட் யூ மீன்?” என்றான் கண்களைச் சுருக்கி.
“எனக்கு உங்களைத் துருவ்னு கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு துருவ்…” என்றாள்.
“தூரிகா…”
“வெயிட்! நான் பேசி முடிச்சிடுறேன். ஓட்டலில் வைத்து என் ட்ரெஸ் பத்தி ஒன்னு சொன்னீங்க. எனக்குப் பிடிச்ச ட்ரெஸ் நான் போடலாம்னு. எஸ், கண்டிப்பா எனக்குப் பிடிக்காமல் ட்ரெஸ் பண்ணிக்க மாட்டேன். அதே நேரத்தில், எனக்குப் பிடிச்சதை என் மனசுக்கு பிடிச்சவரும் பார்த்து ரசிக்கணும்னு நினைப்பேன். சோ, இப்ப சொல்லுங்க துருவ், எனக்கு இந்த ட்ரெஸ் எப்படி இருக்கு?” என்று சேலை முந்தானையை விரித்துக் காட்டி பாவனையுடன் கேட்டாள்.
அவளை வெறித்துப் பார்த்தவன், “இதை எதுக்கு என்கிட்ட கேட்கிறீங்க தூரிகா?” என்றவன் குரலில் கோபம் கொதித்துக் கொண்டு நின்றது.
“இன்னுமா உங்களுக்குப் புரியலைனு சொல்றீங்க துருவ்? சரி, நானே சொல்றேன். ஏன்னா, என் மனசுக்கு பிடிச்சவர் நீங்க தான் துருவ்…” என்றாள் அழுத்தமாக.
“தூரிகா!” என்று குரலை உயர்த்தி அதட்டினான் துருவன்.
https://amzn.to/49wa3Up
https://www.amazon.com/dp/B0D1LPSZZP
https://www.amazon.com.au/dp/B0D1LPSZZP
https://www.amazon.co.uk/dp/B0D1LPSZZP
https://www.amazon.ca/dp/B0D1LPSZZP
https://www.amazon.fr/dp/B0D1LPSZZP
(இப்போதைக்கு ஃப்ரீ இல்லை)
எழிலன்பு