எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
Forum breadcrumbs - You are here:Forumதமிழ் நாவல்கள்: எழுத்தாளர்களின் அறிவிப்புகள்நேரடி புத்தக அறிவிப்புகவி சந்திரா
கவி சந்திரா
Pengal Thalam@admin
2,704 Posts
#1 · July 21, 2024, 4:32 pm
Quote from Pengal Thalam on July 21, 2024, 4:32 pm
ஹாய் டியர்ஸ்எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நான் நலம்.ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயத்தோடு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்து இருக்கேன்..என் இருபத்து ஐந்தாவது நாவல் இப்போ நேரடி புத்தகமா வெளியாகி இருக்கு..ஏழு வருடம்.. இருபத்து ஐந்து நாவல் என்பது என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம்.. ஒவ்வொரு கதையையும் எழுதி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனைகள்..? எவ்வளவு இடைஞ்சல்கள்..? அதையெல்லாம் மீறி இதை செய்து முடித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..எனக்கு வாய்ப்பளித்து இன்று வரை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..இந்த புத்தகத்திற்கு நான் கேட்டதும் முன்னுரை எழுதி கொடுத்ததற்கு நன்றி கா..உங்க பர்சனல் ஒர்க்கில் நீங்க எவ்வளவு பிஸின்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனாலும் எனக்குன்னு நேரம் ஒதுக்கி நீங்க செய்த இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..இந்த ஏழு வருட பயணத்தில் பல அன்பு உள்ளங்களை நான் சம்பாதித்து இருக்கேன்..என் ஒவ்வொரு அடியிலும் உடன் நின்று ஊக்குவித்த என் நெருங்கிய நட்புகள், வாசக தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..நீங்கள் எல்லாம் இல்லையென்றால் நான் இல்லை.. என்னால் இத்தனை கதைகளை என்னால் எழுதி இருக்கவே முடியாது.. அனைவருக்கும் நன்றி.. நன்றி..சரி இப்போ கதையை பற்றி பார்ப்போமா..?கதையின் தலைப்பு : “எனை தான் அன்பே மறந்தாயோ..!!”நாயகர்கள் : ஷியாம் வினோதன், தீரஜ் ராகவன்நாயகி : சஞ்சுயுக்தாஇப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..ஷியாமும் யுக்தாவும் தேன்நிலவுக்கு வந்த இடத்தில் உலகத்தையே மறந்து அவர்கள் இருவர் மட்டுமே உலகம் என்பது போல் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.வழக்கம் போலவே தன் காதலை ஷியாம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன் காதலின் அளவை யுக்தாவும் ஷியாமிற்கு புரியும்படி நடந்துக் கொண்டிருந்தாள்.இந்தத் தருணத்திற்காக வருடக் கணக்காக காத்திருந்த ஷியாமின் காத்திருப்பு கொஞ்சமும் வீண் போகவில்லை அவனின் காதல் அவளின் மனதையும் அவன்பால் மொத்தமாக சாய்த்து இருந்தது.ஒரு மாலை நேரம் படகு சவாரி செய்ய இருவரும் கிளம்பினர். யுக்தாவின் இடையில் கை பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷ்யாம் நடக்க, விரும்பியே அவனோடு இணைந்து இழைந்து நடந்து கொண்டிருந்தாள் யுக்தா.இவர்களின் இணக்கமும் நெருக்கமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க.. சிலரை அதுவே பொறாமை கொள்ள செய்து கொண்டிருந்தது. அப்படி ஒரு அன்னியோன்யம் அவர்களிடையே இருவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.அதே மனநிலையோடு திகட்டத் திகட்ட காதலோடும் சிலபல கொஞ்சல்களோடும் தங்கள் படகு சவாரியை முடித்து விட்டு கரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.முதலில் ஷியாம் இறங்கி கை கொடுக்க அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கியவள் தன் நடையை தொடர இருந்த நொடி, எதிரில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து “தீரஜ்ஜ்ஜ்...” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள் யுக்தா.யுக்தாவின் அலறலை கேட்டு அதிர்ந்தவன், அவள் மயங்கிச் சரியவும் “யுகி..” என்று பதற்றத்தோடு அவளை தாங்க.. அவனுக்கு கொஞ்சமும் குறையாத பதட்டத்தோடு “சஞ்சு...” என்ற அலறலோடு ஓடிவந்து அவளை தாங்கி இருந்தான் தீரஜ்.ஷியாம் ‘யார் இவன்..?’ என்பது போல் பார்த்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூறிவிட.. ஆனாலும் கண் விழிக்காமல் படுத்து கிடந்தவளை எண்ணி தீரஜ் ஒரு பக்கமும், ஷியாம் ஒரு பக்கமுமாக துடித்து தவித்து காத்துக் கிடந்தனர்.இருவரையும் சில மணி நேரங்கள் துடியாய் துடிக்க வைத்துவிட்டு யுக்தா கண் விழிக்க.. அதற்காகவே அவளின் இரு புறமும் காத்துக் கிடந்தவர்கள் பதட்டத்தோடு ஆவலாக நெருங்கி அவள் முகம் பார்த்தனர்.கண்விழித்ததும் முதலில் ஷியாமை கண்டு ஒரு அன்னியப் பார்வையை பார்த்து விட்டு தன் விழிகளை அறை முழுவதும் சுழற்றியவள் இடது பக்கம் நின்றிருந்த தீரஜை கண்ட நொடி முகம் பூவாய் மலர தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி “தீரஜ்...” என்று அழைத்தாள் சஞ்சு.**********************மேலே இருக்கும் காட்சியை எங்கேயோ பார்த்தது போல இருக்கா..? வேற எங்கேயும் இல்லை.. நான் தான் 2019ல் இந்த கதைக்கான டீசரை போட்டேன்..அதற்கு பின் எழுதவே முடியாமல் தள்ளிப் போய் இப்போது நேரடி புத்தகமாக வெளி வந்திருக்கிறது.புத்தகம் நம் நிவிதா டிஸ்டிரிபூஷனில் 10% தள்ளுப்படி விலையில் கிடைக்கும்..விலை : ரூ – 360தள்ளுப்படி விலை : ரூ – 320புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ளே அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளுங்கள்..99940 47771 / 99623 18439இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் என்னோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.kavichandrastory2018@gmail.comஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும்கவி சந்திரா
ஹாய் டியர்ஸ்
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நான் நலம்.
ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயத்தோடு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்து இருக்கேன்..
என் இருபத்து ஐந்தாவது நாவல் இப்போ நேரடி புத்தகமா வெளியாகி இருக்கு..
ஏழு வருடம்.. இருபத்து ஐந்து நாவல் என்பது என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம்.. ஒவ்வொரு கதையையும் எழுதி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனைகள்..? எவ்வளவு இடைஞ்சல்கள்..? அதையெல்லாம் மீறி இதை செய்து முடித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..
எனக்கு வாய்ப்பளித்து இன்று வரை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
இந்த புத்தகத்திற்கு நான் கேட்டதும் முன்னுரை எழுதி கொடுத்ததற்கு நன்றி கா..
உங்க பர்சனல் ஒர்க்கில் நீங்க எவ்வளவு பிஸின்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனாலும் எனக்குன்னு நேரம் ஒதுக்கி நீங்க செய்த இந்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..
இந்த ஏழு வருட பயணத்தில் பல அன்பு உள்ளங்களை நான் சம்பாதித்து இருக்கேன்..
என் ஒவ்வொரு அடியிலும் உடன் நின்று ஊக்குவித்த என் நெருங்கிய நட்புகள், வாசக தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
நீங்கள் எல்லாம் இல்லையென்றால் நான் இல்லை.. என்னால் இத்தனை கதைகளை என்னால் எழுதி இருக்கவே முடியாது.. அனைவருக்கும் நன்றி.. நன்றி..
சரி இப்போ கதையை பற்றி பார்ப்போமா..?
கதையின் தலைப்பு : “எனை தான் அன்பே மறந்தாயோ..!!”
நாயகர்கள் : ஷியாம் வினோதன், தீரஜ் ராகவன்
நாயகி : சஞ்சுயுக்தா
இப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..
ஷியாமும் யுக்தாவும் தேன்நிலவுக்கு வந்த இடத்தில் உலகத்தையே மறந்து அவர்கள் இருவர் மட்டுமே உலகம் என்பது போல் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தனர்.
வழக்கம் போலவே தன் காதலை ஷியாம் அவனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தன் காதலின் அளவை யுக்தாவும் ஷியாமிற்கு புரியும்படி நடந்துக் கொண்டிருந்தாள்.
இந்தத் தருணத்திற்காக வருடக் கணக்காக காத்திருந்த ஷியாமின் காத்திருப்பு கொஞ்சமும் வீண் போகவில்லை அவனின் காதல் அவளின் மனதையும் அவன்பால் மொத்தமாக சாய்த்து இருந்தது.
ஒரு மாலை நேரம் படகு சவாரி செய்ய இருவரும் கிளம்பினர். யுக்தாவின் இடையில் கை பதித்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷ்யாம் நடக்க, விரும்பியே அவனோடு இணைந்து இழைந்து நடந்து கொண்டிருந்தாள் யுக்தா.
இவர்களின் இணக்கமும் நெருக்கமும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்க.. சிலரை அதுவே பொறாமை கொள்ள செய்து கொண்டிருந்தது. அப்படி ஒரு அன்னியோன்யம் அவர்களிடையே இருவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அதே மனநிலையோடு திகட்டத் திகட்ட காதலோடும் சிலபல கொஞ்சல்களோடும் தங்கள் படகு சவாரியை முடித்து விட்டு கரை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.
முதலில் ஷியாம் இறங்கி கை கொடுக்க அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கியவள் தன் நடையை தொடர இருந்த நொடி, எதிரில் நின்று கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து “தீரஜ்ஜ்ஜ்...” என்ற அலறலோடு மயங்கி சரிந்தாள் யுக்தா.
யுக்தாவின் அலறலை கேட்டு அதிர்ந்தவன், அவள் மயங்கிச் சரியவும் “யுகி..” என்று பதற்றத்தோடு அவளை தாங்க.. அவனுக்கு கொஞ்சமும் குறையாத பதட்டத்தோடு “சஞ்சு...” என்ற அலறலோடு ஓடிவந்து அவளை தாங்கி இருந்தான் தீரஜ்.
ஷியாம் ‘யார் இவன்..?’ என்பது போல் பார்த்தாலும் அப்போது இருந்த பதட்டத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் தன் மனைவியை காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் என்று மருத்துவர் கூறிவிட.. ஆனாலும் கண் விழிக்காமல் படுத்து கிடந்தவளை எண்ணி தீரஜ் ஒரு பக்கமும், ஷியாம் ஒரு பக்கமுமாக துடித்து தவித்து காத்துக் கிடந்தனர்.
இருவரையும் சில மணி நேரங்கள் துடியாய் துடிக்க வைத்துவிட்டு யுக்தா கண் விழிக்க.. அதற்காகவே அவளின் இரு புறமும் காத்துக் கிடந்தவர்கள் பதட்டத்தோடு ஆவலாக நெருங்கி அவள் முகம் பார்த்தனர்.
கண்விழித்ததும் முதலில் ஷியாமை கண்டு ஒரு அன்னியப் பார்வையை பார்த்து விட்டு தன் விழிகளை அறை முழுவதும் சுழற்றியவள் இடது பக்கம் நின்றிருந்த தீரஜை கண்ட நொடி முகம் பூவாய் மலர தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி “தீரஜ்...” என்று அழைத்தாள் சஞ்சு.
**********************
மேலே இருக்கும் காட்சியை எங்கேயோ பார்த்தது போல இருக்கா..? வேற எங்கேயும் இல்லை.. நான் தான் 2019ல் இந்த கதைக்கான டீசரை போட்டேன்..
அதற்கு பின் எழுதவே முடியாமல் தள்ளிப் போய் இப்போது நேரடி புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
புத்தகம் நம் நிவிதா டிஸ்டிரிபூஷனில் 10% தள்ளுப்படி விலையில் கிடைக்கும்..
விலை : ரூ – 360
தள்ளுப்படி விலை : ரூ – 320
புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ளே அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளுங்கள்..
99940 47771 / 99623 18439
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்..
கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் என்னோடு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Click for thumbs down.0Click for thumbs up.0
Post Views: 155,289