எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்
அமேசான் இணைப்பு - செப்டம்பர் மாதம்
Quote from Pengal Thalam on September 19, 2024, 10:47 amலாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
லாக் இன் செய்து, Reply பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கதையின் திரிகளை நீங்களே இங்கு பதிவிட உங்களை இந்த pengalthalam அன்புடன் வரவேற்கிறது, தோழமைகளே....
Quote from Pengal Thalam on September 22, 2024, 9:05 pmShehazaki Novels
காதல் போதையடா நீ எனக்கு...College life story... காதல் கல்யாணத்தையே வெறுக்கும் நாயகன்.. அவன் பின்னாலே ஹட்ச் டோக் போல் திரியும் நம் நாயகி..In linkhttps://amzn.to/3XPl2FMUSA linkகதை முன்னோட்டம்>>>"ரூஹி..." என்ற மாயாவின் குரலில் சட்டென கண் திறந்தவன் அவளை ஏறெடுத்தும் பார்க்காது,"மாயா, இங்கிருந்து போ!" என்று இறுகிய குரலில் சொன்னான். அந்த குரலே மாயாவிற்கு வித்தியாசமாக தோன்றியது.ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மறுபடியும் சந்தர்ப்பம் கிடைக்காதோ? என பயந்தவள் உள்ளுக்குள் பதறினாலும் அதை வெளிக்காட்டாது, "ரூஹி, நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நான்..." என்று அவள் சொல்ல வரும் போதே, "உன்னை இங்கிருந்து போக சொன்னேன் மாயா" பல்லைகடித்துக் கொண்டு ரோஹன் சொல்ல, மாயாவோ விடுவதாக இல்லை."இல்ல ரூஹி, நான் பேசியே ஆகணும். நீ கேட்டுத்தான் ஆகணும். நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நான் வந்து..." அவள் சொல்லிமுடிக்கவில்லை. "ஏய்..." என்ற கர்ஜனையுடன் எழுந்து நின்றவன் அடுத்தநொடி அவளை அறைந்தே இருந்தான்.கலங்கிய கண்களுடன் கன்னத்தை பொத்தியவாறு அதிர்ச்சியாக ரோஹனை நோக்கியவளின் இதழ்களோ "ரூஹி" என்று முணுமுணுத்தது."வில் யூ ஷட் அப்! நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ஓவரா தான் போற. அதான் சொல்றேன்ல வேணாம்னு. அட ஆமால்ல, இத்தனைநாள் என் கூடவே இருந்து என்னை டோர்ச்சர் பண்றவ போன்னு சொன்னா போயிருவியா? ஜஸ்ட் பணத்துக்கும் இதோ என் முகத்துக்கும் என் பின்னாடி அலையிறவ தானே நீ. இது இல்லைன்னா என்னை கண்டுக்க கூட மாட்ட.சத்தியமா சொல்றேன்டி எனக்கு உன்மேல சின்னதா கூட ஃபீலிங்க்ஸ் கிடையாது. ச்சே! எல்லாமே என் தப்புதான். நீ என் வாழ்க்கைகுள்ள வர நானே காரணமாயிட்டேன். ஒருத்தருக்கு பிடிக்கலையா, அப்போவே அவங்களை விட்டு விலகி போயிரணும். அதுக்கு பேரு தான் சுயமரியாதை. ஆனா, நீ ச்சே!இப்படியெல்லாம் பண்ணா நான் காதலிப்பேன்னு எப்படி நீ நினைக்கலாம்? வெறுப்பா இருக்கு. இட்ஸ் இர்ரிடேட்டிங்! எனக்கு இன்னொருத்தி கூட கல்யாணம் ஆக போகுது. இன்னொருத்திக்கு சொந்தமானவன் மேல ஆசைப்படுறது ரொம்ப கேவலமான விஷயம்.ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ! ரூஹி ரூஹின்னு உருகிகிட்டு இருக்கியே. உன் ரூஹிய உண்மையா காதலிக்கிறேன்னா, தயவு செஞ்சி என் முன்னாடி வராத இங்கிருந்து போயிரு" ரோஹன் மேலும் பேச வர, கைநீட்டி அவனை தடுத்திருந்தாள் அவள்.கன்னங்களில் கண்ணீர் ஓட, கீழுதட்டை கடித்து அழுகையை கட்டுப்படுத்தி அவனை நேருக்கு நேராக பார்த்து வேதனை நிறைந்த விழிகளுடன், "ஐ அம் சோரி..." என்று மட்டும் கூறிவிட்டு சென்ற மாயாவும் சரி, போகும் அவளையே வெறித்தவாறு நின்றிருந்த ரோஹனும் சரி அறியவில்லை. இதுவே இவர்களின் கடைசி சந்திப்பு என்று.************************"த அவார்ட் கோஸ் டூ மிஸ்.மஹேஷ்வரி, மேனேஜிங் டிரெக்டர் ஆஃப் ஐரா கம்பனீஸ்" என்று பெயர் அறிவிக்கப்பட்டதும், எல்லோர் பார்வையும் வாசல்புறம் திரும்பியது.தொலைப்பேசியில் புதைந்திருந்த ரோஹன் கூட தன் பின்னால் கேட்ட வியப்பான பேச்சுகளிலும் ஆச்சரியமான குரல்களில் நிமிர்ந்து சலசலப்பு உண்டான திசையை நோக்கினான்.ஒருநொடி அவன் பார்ப்பதை அவனாலே நம்ப முடியவில்லை. பாபியும் அதே அதிர்ச்சியில் "ரோக்கி..." என்று கத்தியவாறு தன் நண்பனை திரும்பிப் பார்த்தான்.ரோஹனை பாபி உலுக்க, அவன் இதழ்களோ "மாயா..." என்று அங்கு வந்துக் கொண்டிருந்தவளை பார்த்தவாறு முணுமுணுத்தது.சிகப்பு நிற லேடிகட் ஷர்ட், கருப்பு பேன்ட்டில் முன்னிருந்த துள்ளல் நடை மறைந்து, கம்பீரமாக கண்களில் ஒரு தீர்க்கத்துடன் மாயா வர, இரு நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தே விட்டனர்.முகத்திலிருந்த குழந்தை தனம் மறைந்து, ஐரா சாம்ராஜ்யத்தை கட்டியாழும் பெண் சிங்கம் போல் அவள் வேகநடையிட்டு வர, அவள் முகமோ இறுகிப் போயிருந்தது.தன் பக்கத்திலிருந்தவளிடம் ஏதோ சொல்லியவாறு தன் முன்னால் வந்து தன்னை வாழ்த்துவோரின் வாழ்த்துக்களை கண்ணுக்கு எட்டாத புன்னகையுடன் ஏற்றவள், நேரடியாக மேடையில் ஏறி விருதை வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.'இது மாயா தானா?' என்று கண்களை கசக்கிவிட்டு உற்றுப் பார்த்தனர் இரு ஆண்களும்.மைக்கை இறுக்கிப் பிடித்தவள், அந்த அறிவிப்பாளர் புறம் திரும்பி, "ஒரு சின்ன திருத்தம், மாயா மஹேஷ்வரி" என்று ஆங்கிலத்தில் கூறி தன் பெயரை அழுத்திச் சொல்ல, எல்லோரும் அவள் நிமிர்வில் வியந்து தான் போனர்.தன் கையிலிருந்த விருதை பார்த்தவாறு, "என்ட், என் அம்மா மஹேஷ்வரியும் என் வயசுல இதே விருதை வாங்கியிருக்காங்க. ஆஃகார்ஸ் இதுக்கு முழு காரணமே எங்களோட வர்க்கர்ஸ் என்ட் கஸ்டமர்ஸ் தான். அவங்க இல்லைன்னா வீர் ஆர் நத்திங்.உழைப்பாளர்களோட உழைப்பும், ஒவ்வொரு பொருளையும் வாங்குற கஸ்டமர்ஸ்ஸோட விருப்பமும் தான் ஒவ்வொரு பிஸ்னஸ்க்கும் ஆணித்தரமே. ஐ அம் ப்ரௌட் டூ சே தட் ஐ ஹேவ் பெஸ்ட் வர்க்கர்ஸ். தேங்க் யூ. தேங்க் யூ சோ மச்" என்றுவிட்டு மேடையிலிருந்து அவள் இறங்க, மொத்த அரங்கமுமே கை தட்டலில் நிரம்பியிருந்தது.பாபியோ 'இது கனவு தானோ?' என்று தன்னை தானே கிள்ளி பார்த்து திகைக்க, ரோஹனோ முதல்தடவை அவளை இப்படி ஒரு அவதாரத்தில் பார்த்ததில் அதிர்ந்தாலும், பின் சலனமே இல்லாமல் அழுத்தமாகவே அவளை பார்த்திருந்தான்.விருது வழங்கும் விழா முடிந்து அந்த அரங்கத்தின் பின்னால் கேளிக்கை விருதுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சென்ற பாபி முதல் வேலையாக கண்களை சுழலவிட்டு மாயாவை தேடினான் என்றால், ரோஹனோ அங்கிருக்கும் மது போத்தல்களை ஆராய்வதையே வேலையாக வைத்திருந்தான்."டேய் ரோக்கி, என்னால அதிர்ச்சியில இருந்து வெளில வரவே முடியலடா. நிஜமாவே அது மாயா தானா? அவ தான் ஐரா நிறுவனத்தோட எம்.டியா? அப்போ நம்ம கூட கொலேஜ்ல படிச்சதெல்லாம்..." பாபி புரியாமல் கேட்க, ரோஹனோ சட்டென்று, "நம்ம தலைல நல்லா மிளகாய் அரைச்சிருக்கா" என்று கேலியாக சொன்னான்."ஷட் அப் ரோக்கி! அவ நம்மகிட்ட சொல்லாம போனதுல எனக்கு கோபம் இருக்குதான். ஆனா, அவ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நம்மள விட்டு போயிருக்கா. அதுவும் அவ பெயருல பாதி தான் நமக்கே தெரிஞ்சிருக்கு. அவளோட அம்மா பெயரையே அவளுக்கு வச்சிருக்காங்க. அவ அம்மா இறந்ததை தாங்க முடியாம தனிமைய போக்கிக்க மங்ளூர் வந்ததா சொன்னா..." என்று இழுத்து யோசித்தவன்,"அட ஆமால்ல! மாயா வரதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மிஸ்.மஹேஷ்வரி இறந்தாங்க. ஆனா, எவ்வளவு சாதாரணமா இருந்திருக்கா. அவக்கிட்ட இருக்குற பணத்துக்கு ஒரு ஹோட்டலையே விலைக்கு வாங்கியிருக்கலாமே..." என்று சொல்ல, அந்த விடயங்கள் அத்தனையும் ரோஹனுக்கு புதிதுதான்."ஆனாலும், கண்ணு முன்னாடி நாம இருந்தும் நம்மள கண்டுக்கவே இல்லை டா என் பேபி. என்னை விடு, உன்னை கூட ஒரு பொருட்டாவே மதிக்கலன்னா பாரேன்!" பாபி கேலியாக சொல்ல, சரியாக "ஹாய் பாய்ஸ்" என்ற மாயாவின் துள்ளலான குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர்.இருவரையும் துளைத்தெடுக்கும் பார்வை மாயா பார்த்திருக்க, ரோஹனோ அவளையே ஆழ்ந்து நோக்கினான்.
Shehazaki Novels
Quote from Pengal Thalam on September 23, 2024, 9:46 amநான் அவளில் பரிபூரணம் (Tamil Edition)
https://amzn.to/3BbBUxJ
நான் அவளில் பரிபூரணம் (Tamil Edition)
நான் அவளில் பரிபூரணம் (Tamil Edition)
நான் அவளில் பரிபூரணம் (Tamil Edition)
Quote from Pengal Thalam on September 26, 2024, 10:00 amKani Suresh
விருப்பமில்லாமல் சூழ்நிலையின் காரணமாக திருமண பந்தத்தில் இணைய.இருவருக்குள்ளும் உள்ள புரிதல் பின்னாளில் காதலாக மாற..அதை அவர்கள் எப்படி வெளி படுத்துகிறார்கள் என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.கதையில் இருந்து சில வரிகள்...எனக்கும் அந்த பெண்ணை பிடித்திருக்கிறது ஆனால் நீ இப்பொழுது பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றார். ஏங்க , நான் இருவரின் நலனையும் யோசித்து தானே இவ்வாறு பேசுகிறேன் என்றார் ..எனக்கு புரியவில்லை டி என்ன இருவரின் நலனை யோசித்தாய் ? உன் பெரிய மகனுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை மறந்து விடாதே !ஒத்துக்கொள்கிறேன்."எனக்கு மகியை ரொம்ப பிடிக்கும் அதற்காக அவன் விரும்பிய பெண்ணை அதுவும் அவனது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணை நம் சித்துவிற்கு திருமணம் செய்து வைப்பது பற்றி பேசுவது சரியா ?.."அவனுக்கு என்று தனிப்பட்ட விருப்பு வேறுப்பெல்லாம் இருக்காதா ?அவனை நீ சூழ்நிலை கைதியாக நிற்க வைக்கிறாய்? என்பதை மறந்து விடாதேNizhalaay varutum thentral...: நிழலாய் வருடும் தென்றல்...https://amzn.to/3zGkg4wபடித்துவிட்டு உங்களது ரேட்டிங் மற்றும் கமெண்ட்டை தட்டி விட்டு செல்லுங்கள்..
Kani Suresh
Quote from Pengal Thalam on September 30, 2024, 9:37 amஎனை ஆளும் கர்வமே! - அதியா ADHIYA
https://amzn.to/3zEEuvw
"எனை ஆளும் கர்வமே..." - தீராப் பகை பற்றி எரியும்போது, அதில் சொட்டுத் தேனாய் காதல் சேர்ந்து, ஆண்மையின் கர்வம் வீழ்ந்து, பெண்மையின் காதல் ஆளும் கதை.
என் எழுத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஆதரவு தந்த அனைத்து நட்புகளுக்கு, ஆர்ப்பரிக்கும் ஆனந்த அன்பு நன்றிகள்.
தங்கள் அன்பின் மகிழ்வில்
அதியா
எனை ஆளும் கர்வமே! - அதியா ADHIYA
"எனை ஆளும் கர்வமே..." - தீராப் பகை பற்றி எரியும்போது, அதில் சொட்டுத் தேனாய் காதல் சேர்ந்து, ஆண்மையின் கர்வம் வீழ்ந்து, பெண்மையின் காதல் ஆளும் கதை.
என் எழுத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஆதரவு தந்த அனைத்து நட்புகளுக்கு, ஆர்ப்பரிக்கும் ஆனந்த அன்பு நன்றிகள்.
தங்கள் அன்பின் மகிழ்வில்
அதியா
Quote from Pengal Thalam on October 2, 2024, 11:36 amAkila Ravi
எண்ணமெல்லாம் உன் வண்ணமே (Tamil Edition)காதலித்து இரு வீட்டினரையும் எதிர்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் இடையே போதிய பக்குவமும், புரிதலும் இல்லாமல் போக விவாகரத்தில் வந்து நிக்கிறது அந்த உறவு. விதி இருவரையும் மீண்டும் ஒரே வீட்டினில் அடைத்து வைக்கிறது. தொலைத்த காதலை மீட்டெடுக்கிறார்களா தம்பதிகள் என்பதை இந்த குறுநாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
https://amzn.to/3Y6mXFV
Akila Ravi
காதலித்து இரு வீட்டினரையும் எதிர்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் இடையே போதிய பக்குவமும், புரிதலும் இல்லாமல் போக விவாகரத்தில் வந்து நிக்கிறது அந்த உறவு. விதி இருவரையும் மீண்டும் ஒரே வீட்டினில் அடைத்து வைக்கிறது. தொலைத்த காதலை மீட்டெடுக்கிறார்களா தம்பதிகள் என்பதை இந்த குறுநாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.