Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

ராஜி

ஹாய் பிரெண்ட்ஸ்..

 

இதோ அடுத்த கதை அறிவிப்புடன் வந்துட்டேன். இந்த கதை ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து தொடங்குவேன். அமேசானில் ஞாயிறு தோறும் பதியப்படும்.🤗

 

⚠️ 18+ content 

 

எஸ் அதேதான்.. டீசர் படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.😬

 

உடனே பொங்காதீங்க.. இதே கான்செப்ட் "கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ" -ல் கொடுத்துட்டேன்.😌😌

 

நான் சொன்னால் தவிர.. யாருக்கும் அது தோன்றியிருக்காது. அந்தளவிற்கு ஏற்புடையதாக தான் தருவேன்.🫡

 

இந்த கதையும் அது போன்று தான்.. கதை படித்தால் உங்களுக்கே புரியும்.

 

-----------------

 

தலைப்பு: இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!

 

கலிஃபோர்னியா நாட்டை நோக்கி ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க.. ஒருவன் மட்டும் உறக்கம் இல்லாமல் தவித்தான்.

 

தானே திரும்பும் பார்வையை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான். தற்போதைக்கு தனது மனதிடம் இருந்து தப்பிக்க.. எழுந்து அங்கிருந்த கழிவறைக்குள் புகுந்தான்.

 

அங்கே இருந்த சின்கில் பைப்பை திறந்து விட்டு.. கரங்களை நீட்டி‌ மனதின் வெம்மையை தடுக்க முயன்றான்.

 

ஆனால் அவனது விரல்கள் நடுங்கின. மெல்ல கையை உயர்த்தி‌ மார்பினை தொட்டுப்‌ பார்த்தான். அவனது இதயத்துடிப்பு மற்றவர்களுக்கு கேட்டு விடும் போன்று.. சத்தமாக துடித்தது.

 

மார்பில் கையை வைத்தவாறு கண்களை மூடி.. கீழுதட்டை கடித்தவாறு சிறிது நேரம் நின்றவன், முடிவில் “ஷெட்” என்று அவனது மார்பிலேயே குத்தி கொண்டான்.

 

அவன் கௌதம்! அமெரிக்கா வாழ் இந்தியன்! இந்தியாவில் தனது தாத்தா பாட்டியுடன் சில நாட்கள் கழித்துவிட்டு.. மீண்டும் பிறந்த இடத்திற்கு செல்கிறான்.

 

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திடம் கௌதம் “இடியட்! அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு! மூணு வயசுல குழந்தை இருக்கு! மனசை அலைய விடாதே! இது ரொம்ப தப்பு கௌதம்! ஸ்டெடி! ஸ்டெடி!” என்றவனின் மனகண்ணில் மகளை தோளில் இறுகி அணைத்தவாறு பரிதவிப்புடன் நின்றிருந்த ஆர்த்தியின் முகம் வந்து சென்றது.

 

மீண்டும் கண்களை இறுக மூடி.. மனதில் தோன்றிய பிம்பத்தை அகற்ற முயன்று விட்டு சின்கில் இரு கரங்களையும் ஊன்றி கண்ணாடி தெரிந்த தன் உருவத்தை பார்த்தவன் “இன்னும் நாலு மணி நேரம் தான்! அதுக்கு பிறகு.. அவ யாரோ நீ யாரோ! இந்த நாலு மணி நேரம்.. எதையும் உளறி‌ வைக்காம இருந்தாலே போதும்! நீ ஒண்ணும் கல்யாணம் ஆனா பெண் பின்னாடி சுத்துர கபோதி இல்லைனு தெரியும். அதனால அதுக்கு பிறகு அவளை கண்டுக்க மாட்டே! எப்படியாவது நாலு மணி நேரத்தை ஓட்டிரு! அதுக்கு பேசாம இங்கேயே இருந்துரு..” என்கையில் இங்கு வந்து அரை மணி ஆகி விட்டதால்.. பணிப்பெண் கதவை தட்டி அங்கிருந்த மைக்கில் அழைக்கும் சத்தம் கேட்டது.

 

அந்த கண்ணாடியிலேயே தனது முன்னந்தலையை முட்டிவிட்டு, கலைந்திருந்த தலையை சரிச் செய்தவன், ஒன்றும் தெரியாதவன் போல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

 

—---------------------

 

கலிஃபோர்னியாவின் அழகை இரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருபதாம் தளமான மொட்டை மாடியில் மனம் கொதிக்க நின்றிருந்தவனிடம் “கூப்பிட்டியா கௌதம்!” என்றவாறு தியாகு வந்து நின்றான்.

 

ஒரே எட்டில் அவனது சட்டையை கொத்தாக பற்றிய கௌதம்.. அவனை அப்படியே தள்ளியவாறு பின்னால் இருந்த சுவற்றில் சாய்த்தவன் “ஏன்டா இரண்டு பொண்ணுங்க வாழ்வில் விளையாடறே!” என்று கர்ஜீத்தான்.

 

அதற்கு தியாகு அவனை அசராது பார்த்து “ஆர்த்தி கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கி கொடு! நான் மிருதுளா கூட மட்டும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன்.” என்று இரக்கமில்லாமல் கூறினான்.

 

அதைக் கேட்ட கௌதம் ஆத்திர மிகுதியில் பளார் என்று அவனது கன்னத்தில் அறைந்தான்.

 

[ நீங்களே உங்கள் கதை பதிந்த தளத்தின் திரியை இங்கு லாக் இன் [Log In] செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் தோழிகளே - pengalthalam Hema ]