Forum

இந்த இடத்தில் உங்கள் தொழில் விளம்பரம் வரவேண்டுமா? – தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 8825463689.

எழுத்தாளர் & ரசிகைகள் தொடர்பு தளம்

Please or Register to create posts and topics.

நந்தினி சுகுமாரன்

நந்தினி சுகுமாரன் 

குலக்கதை 

 

கார்மேகன்.. தனது இளமை ஆசைகளை ஒடுக்கி, எல்லைச்சாமியை உருபெற வைப்பதற்காக தவ‌ வாழ்வு மேற்கொண்டதாலோ என்னவோ, கரிகாலனாய் வந்தவன் இளமை துடிப்போடு வேகமும், நிரம்பி வழியும் ஆசைகளோடும் தளும்பி நின்றான்.

 

போதையின் மீதான ஆர்வம்.. மது, புகை போன்றவற்றை விடலைப் பருவத்திலேயே ருசிக்க வைத்திட,‌ ஒரு காலக்கட்டம் வரை அதனுடனே பயணம் செய்தான். 

 

கார்மேகன் தந்தையின் சொல்லை கட்டளை என ஏற்றான் என்றால்.. கரிகாலனோ, ஈன்றவர் மட்டுமல்ல பெரியவர்கள் எவரது சொல்லுக்கும் செவிமடுக்க வில்லை.

 

முற்பிறப்பில் எல்லைச்சாமியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது வாழ்வையே அர்பணித்தவன், மறுபிறப்பில் 'அது வெறும் பெட்டிதான். சாமி இல்ல!' என்று விதண்டாவாதம் பேசினான்.