இத்தளம் பெண்களின் மனதில் தோன்றும் எண்ணச் சிதறல்களின் இருப்பிடமாக இருக்கும் தோழிகளே…
பெண்ணின் மனக்கிறுக்கல்கள் :
‘கோழை’ – என் வாழ்நாளில் இன்று வரை நான் இந்த வார்த்தையை எங்காவது கேட்டுவிட்டால் அந்த நேரம் மனம் விதிர்த்து இதயம் சில நொடிகளாவது துடிப்பதை நிறுத்திவிடும்… என் சிந்தனை ஒரு சுழலுக்குள் எனை இழுப்பது போல என் எண்ணங்களைக் கொண்டு சென்று …ஓரப்பார்வையால் மேலே உன் முகம் பார்க்க இயலாமல் உன் பாதம் பார்த்தே ஒரு மணி நேரம் அசையாமல் பயணிக்கும் அந்த பேருந்துப் பயணங்களில் தான் எனை கொண்டு சென்று நிறுத்தும். ஒரு முறை ஒரேமுறை உன் முகம் பார்த்து என் கண்கள் வழியாக என் இதயத்தை உனக்கு உணர்த்தி இருக்கலாமோ என்று எனைக் கேட்டுக் கொள்ளாத நாளே இல்லையே…
யாரோ…
உன்
புல்லாங்குழல்
இசை
எனக்காகவும்
ஒரு
முறை
இசைக்கப்
படாதா…
பரந்தாமா!!!
யாரோ…
ஒவ்வொரு தடவையும்
சுற்றி இருப்பவர்கள்
தங்கள்
வார்த்தைகளால்
எனை
காயப்படுத்தும்
பொழுது
என்னுள் எழும்
பாரதியின் வரிகள்
” வீழ்வே னென்று நினைத் தாயோ?”
யாரோ…
புத்தகத்தில்
மூடி
வைத்து
வளர்வதைப்
பார்த்து ரசிக்கும்
உணர்வாளன்
கையில் சேர…
மயிலிறகு
மனம்
வைத்திருந்தேன்…
அந்தோ!!!
பட்டாம்பூச்சி
வாலில்
நூல் கட்டி
விளையாடும்
வளர்ந்த சிறுவனின்
கையில் நான்!
யாரோ…
பிறந்தது முதல் கண்கள் வழியாக மனதில் குப்பைகளை மட்டுமே கொட்டிக்கொண்டு இருந்தேன். அழுத்தப்பட்ட குப்பைகளால் என் முகத்தில் மட்டுமல்ல நானே மொத்தமும் கரியாகி நிற்கிறேன் என்றே எண்ணினேன்.ஆனால் இப்போதெல்லாம் என்னுள் சிறு வெளிச்சம்… மற்றவர்களுக்கு நிலக்கரியாக தெரியும் நான் எனக்கே எனக்கு என்று என்னுள்ளே நான் வைரமாகிறேனோ….இறுக்கப்பட்ட குப்பைகள் கரியாத்தான் ஆகுமென்று என்ன உறுதி…அது என் மனம் போல வைரமாகவும் ஆகலாமே…இது கர்வம் எனில் ஆம்!!!நான் கர்வம் கொள்கிறேன்…ஏன்????நானே கர்வமும் ஆகிறேன். ஆனாலும் என்னுள் சிறு அச்சம்…மற்றவர்கள் விதியை நிர்ணயிக்கும் வெறும் ராசிக்கல்லாக…மற்றவர்கள் உயிரை குடிக்கும் கண்ணாடிக்கல்லாக…என்னை அறியாமல் மாறிக்கொண்டு இருக்கிறேனோ??????????
யாரோ…
உன் சிரிப்பின்
ஒலி என் வேர்வரை
சென்று அரிக்கும்
என்று யாராவது
முன்பு
கூறியிருந்தால்
சிரித்திருப்பேன்…
ஆனால்
இப்போது
அழுகை தானே
வருகின்றது…
யாரோ…
—————————————–
தளத்தின் மற்ற முக்கிய இணைப்புகள் :
தமிழ் குடும்ப மற்றும் காதல் நாவல் எழுத்தாளர்களின் பெயர்கள்
Names of Tamil Romance Novel Writers