பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! – Pengal Thalam

படித்தது :

பெண்களே தயவு செய்து ஜாக்கிரதையாய் இருங்கள்!

நான் இங்கு பதிவிட்டு இருப்பது இணையத்தில் படித்தவை தான். அதனை எல்லா பெண்களும் தெரிந்து கொள்ளவே இங்கு அளிக்கிறேன். இதனைப் பெண்கள் தங்கள் சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் ஏன் தாயிடமும் கூட எடுத்துக் கூறுங்கள்.  ஒருவேளை எங்காவது யாராவது ஒரு பெண்ணாவது காப்பாற்றப் படக்கூடும். நன்றி.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு புதிய உத்தி இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

                  சமீபத்தில் ஐந்து ஆண்களால் கூட்டிச் செல்லப்பட்ட ஒரு பெண், பஸ் ஸ்டாண்ட் அருகில் நினைவின்றி கண்டறியப்பட்டிருக்கிறார். போலீஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.  அந்தப் பெண்ணுக்கு அந்த மாலை வேளையில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைவு கூர முடியவில்லை!    ஆனாலும் பரிசோதனை முடிவுகள் அவர் பலமுறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டுத்தப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்தது!


                  அவரது இரத்தத்தில் R——-l. என்ற மருந்து பொருள் கலந்திருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது!  இந்த R——l என்ற மருந்துப் பொருள் தற்போது பலாத்காரத்திற்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது! இந்த R——-l. உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை. இது தற்பொழுது கயவர்களால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் உபயோகப்படுத்தப்படுகிறது! இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும்.அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூர முடியாது!
                            அதையும் விட அந்த மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் அதனால் கருத்தரிப்பதைத் தடுக்கிறது! எனவே பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் ‘paternity test ‘ மூலம் அடையாளப்படுத்தப்படுவாரோ என்ற பயத்திலிருந்தும் அந்த கயவர்கள் தப்பிக்க இது. உதவுகிறது!  இந்த மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன!  இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்R——-l எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது! தனி சுவையோ, கலரோ கிடையாது. எனவே பானத்தின் கலரோ சுவையோ இந்த மாத்திரையைக் கலந்த பின்னும் மாறுவதில்லை!
                   அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரிய வருவது இல்லை. அதனைக் குடிப்பதால் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டு, மறுநாளோ, சம்பவம் நடந்த பின்னோ அதனைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் அவர்களது நினைவில் இருப்பதில்லை!கயவர்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடியது!இன்டர்நெட் பக்கங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது எனத் தெளிவாக விளக்கிக்கூறும் வெப்சைட்ஸ் கூட இருக்கிறதாம்.



                         பெண்களே தயவு செய்து வெளியில் செல்கையில் அதிக கவனத்துடன் இருங்கள்! பாய்ஃபிரண்ட் உடன் வெளியிலோ, டேட்டிங்கோ, ஒரு டின்னர் என்று எங்கு யாருடன் வெளியில் சென்றாலும் நீங்கள் குடிக்கும், சாப்பிடும் உணவுப் பொருட்கள், பானங்கள் இவற்றில் அதிக கவனம் வைத்திருங்கள்! கேன் டிரிங்க்ஸ், பாட்டில் கூல் டிரிங்க்ஸ் இவை எல்லாம் சீல் உடைக்கப்படவில்லை என்பதை பருகும் முன் உறுதி செய்யுங்கள்!
                      வேறு அறிமுகமில்லாத நபர்கள் உங்களுக்கு காஃபியோ, கூல்டிரிங்க்சோ வாங்கிக் கொடுப்பதை அனுமதிக்க வேண்டாம். வேறு யாருடைய பானங்களை விளையாட்டிற்குக் கூட டேஸ்ட் செய்து பார்க்க வேண்டாம். ஆண்கள் அனைவரும் உங்களது குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், உறவினர் அனைவருக்கும் இந்த தகவலைத் தெரிவித்து எச்சரிக்கைப் படுத்துங்கள்!


அபாயங்கள் என்ன?

  முழுமையான நினைவாற்றல் இழப்பு, தலைச்சுற்றல், சுவாச மன அழுத்தம் (சுவாசம் குறைதல்), திசைதிருப்பல், குமட்டல், மோட்டார் அசைவுகளில் சிரமம் மற்றும் பேசுவது ஆகியவை அடங்கும். ரோ———-ல் உடல் மற்றும் உளவியல் சார்புநிலையை உருவாக்க முடியும். ரோ———ல் [R——-l]ஒரு “கற்பழிப்பு” மருந்தாக கருதப்படுகிறது

அபாயமான அறிகுறிகள் :
[நடத்தை மாற்றங்கள்]

  • குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடனான உறவை திடீரென்று தவிர்த்தல்,
  • மூச்சை மறைக்க சூயிங்கம் அல்லது புதினாக்களைப் பயன்படுத்துதல்,
  • பணத்தேவை  சிக்கல்களை அடிக்கடி வெளியிடுதல்,
  • கண் தொடர்பைத் தவிர்த்தல்,
  • கதவுகளை பூட்டிக்கொள்ளுதல்,
  • ஒவ்வொரு இரவும் வெளியே செல்லுவது,
  • ரகசிய தொலைபேசி அழைப்புகளை செய்வது,
  • திடீர் பசி ஏற்படுதல்,
  • வழக்கத்திற்கு மாறான சத்தமாக, அருவருப்பான நடத்தையை வெளிப்படுத்துதல்,
  • ஒன்றுமில்லாத விசயத்துக்கு  சிரித்தல்,
  • தடுமாற்றம், ஒருங்கிணைப்பு இல்லாதது, மோசமான சமநிலை
  • தூக்கமின்மை,

மேல் குறிப்பிட்ட மாற்றங்கள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்களிடமோ அல்லது நீங்கள் பெற்றோராய் இருந்து, உங்கள் பிள்ளையிடமோ கவனித்தீர்களா? அப்படியானால் உங்கள் பிள்ளை போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா?

எனில் டீன் ஏஜ் அல்லது இளம் வயதுவந்தோர் போதைப்பொருள் பயன்பாட்டை சந்தேகித்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராகுங்கள். 

உங்கள் மகன் அல்லது மகளோடு பேசத் தொடங்க ஒரு பாதுகாப்பான, திறந்த மற்றும் வசதியான இடத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் நடவடிக்கையைத் தொடங்குங்கள். எல்லா ஸ்மார்ட்போன்களையும் அணைத்துவிடுங்கள்,  நீங்கள் பேசும்போது எந்த தடங்கல்களையும் அனுமதிக்க வேண்டாம். உங்கள் பீதியையும் கோபத்தையும் ஒதுக்கி வைத்துப் பேசுங்கள். அவர்களோடு அதிக நேரம் ஒதுக்குங்கள். விழிப்போடு இருங்கள்.

  எங்கோ ஒரு அக்கா , தங்கை அல்லது ஒரு மகள் இந்த தகவலைப் பகிர்வதால் உங்களால் காப்பாற்றப்படலாம் என்பதை உணர்ந்து வேகமாகப் பகிருங்கள்!  முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ஆயுதம்.அதுவே பெண்களைப் பாதுகாக்கும்!


தளத்தின் மற்ற முக்கிய இணைப்புகள் :

தமிழ் குடும்ப மற்றும் காதல் நாவல் எழுத்தாளர்களின் பெயர்கள் 

Names of Tamil Romance Novel Writers

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *