.
நாவலாசிரியர்கள் > Completed > Ongoing > அமேசான் > இணையதளம் > பிரதிலிபி > Shop > Blog >.
இந்த பக்கத்தில் என் கவனத்திற்கு வரும், தமிழ் நாவல் ஆசிரியர்கள் ஏற்கனவே தங்கள் நாவல்களுக்கு அளித்த டீசர்களை உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்திருக்கிறேன் படித்துவிட்டு உங்களை ஈர்த்த நாவல்களை சென்று படியுங்கள்.
[ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
Tamil Novels’ Teasers
எழுத்தாளர்களே!
உங்கள் கதைகளின் பட்டியல் மற்றும் ஒவ்வொரு கதைகளின் சிறு விவரங்கள் அதாவது அது என்ன வகையான கதை, அதன் கதாபாத்திர படைப்பு, டீசர் மற்றும் வேறு விவரங்கள், இவற்றை எழுத்தாளர்களுக்குரிய இணைய தளமான இந்த ‘pengalthalam’ ல் உங்களுக்கு என்ற தனி பக்கத்தில் இருக்க அல்லது சேர்க்க வேண்டுமா? – இந்த விவரங்களை முறையாக எழுதி எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள். தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : pengalthalam@gmail.com , 8825463689 .
தமிழ் நாவல்களின் டீசர்கள்
.
நிகரில்லா நீ! – முழுநாவல் இப்போது ப்ரீமியம் தளத்தில்…
கதையிலிருந்து…
அந்தக் கடையின் முன், ஒரு குட்டியானை வண்டி நின்றிருக்க, அதிலிருந்து தையல் மிஷினை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
அவள் கடை வாசலில் நின்று பத்திரமாக இறக்கி வைக்கச் சொல்லியோ, என்னவோ சொல்லிக் கையை அசைத்துப் பேசி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.
‘தையல் கடையா?’ என்று நினைத்தபடி பார்த்து நின்றவன், மெல்ல நடந்து தந்தையின் கடைப் பக்கம் சென்றான்.
மகன் கடைப் பக்கம் வரவும் அதிசயமாகப் பார்த்தார் குமாரசாமி.
“இன்னைக்கு மழை பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது. கடைப் பக்கமே வராதவன் எல்லாம் வர்றான்…” என்று எகத்தாளமாக உரைத்தார் குமாரசாமி.
“ஊருக்குள்ள தண்ணிக்குப் பஞ்சமா இருக்காம். அதான் ஜனங்களுக்கு நல்லது செய்ய மழையை வரவைக்க வந்தேன்…” என்று பதிலுக்கு நக்கலாக உரைத்தவன் பார்வை என்னவோ எதிர்க்கடை பக்கம் தான் சென்றது.
இப்போது அவள் பேசுவது நன்றாகக் கேட்டது.
“பார்த்து பத்திரமா இறக்குங்க… மெஷின் டேமேஜ் ஆகிடாம…” என்று தையல் மிஷினை இறக்கி வைத்தவரிடம் உரைத்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு தையல் மிஷின்கள். ஒரு நீளமான மேஜை என்று ஆள்கள் இறக்கி வைத்தனர்.
“அதானே பார்த்தேன். எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு இப்பத்தானே தெரியுது. டேய்… வயசுப் பிள்ளையைப் பார்க்கத்தான்… வாயைப் பிளந்துட்டுக் கடைப் பக்கம் வராதவன் வந்தியா?” என்று மகனிடம் அதட்டலாகக் கேட்டார் குமாரசாமி.
“பின்ன, இந்தக் கிழட்டு மூஞ்சியையா பார்க்க வந்தாங்க?” என்று அவரின் முகத்தில் இடிக்கப் போவது போல் கையை நீட்டினான்.
“அந்தக் கையை அப்படியே உடைக்கப் போறேன் பாரு…” என்று பல்லைக் கடித்தார்.
“முடிஞ்சா உடைங்க.” என்று அவரின் முகத்தின் முன் கையைச் சுற்றிச் சுழற்றி ஆட்டி ஆட்டிக் காட்டினான்.
“கையா இது? பாறாங்கல்லு…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“உங்களுக்கு இல்லையேன்னு பொறாமை…” என்றான் கிண்டலாக.
“எனக்கு இல்லை? சரிதான், இடத்தைக் காலி பண்ணுடா. கடை முன்னாடி நின்னு வியாபாரத்தைக் கெடுக்காதே…” என்றார்.
“ஆமா… சாமான் வாங்க இங்கப் பெரிய கூட்டம் நிக்கிதுல, வியாபாரம் கெடுறதுக்கு. ஆள் இல்லாத கடையில் ஈ ஓட்டுறது எல்லாம் ஒரு பொழப்பு…” என்று அவன் நக்கல் அடிக்க,
“இப்ப இங்க இருந்து போறியா… மேல தண்ணியை ஊத்தி விடவா?” என்று விரட்டினார்.
“யோவ் தகப்பா, இருய்யா… நம்ம கடைக்கு முன்ன ஒரு புதுக்கடை வந்திருக்கு. அது என்ன கடை, ஏது கடைன்னு பார்த்துட்டுப் போறேன்…” என்றான்.
“நம்ம கடையா? என் கடைடா இது. என் கடை முன்ன எந்தக் கடை வந்தா உனக்கு என்ன? அது ஒரு வயசுப் பிள்ளை வைக்கப் போற கடைன்னு தெரிஞ்சு தானே நாக்கைத் தொங்கப் போட்டு வந்து நிக்கிற. நீ பொண்ணுங்களை ரூட்டு விட என் கடை தான் கிடைச்சதா? இப்ப நீ இடத்தைக் காலி பண்ணலை…” என்று தந்தை குதிக்க, மகனோ அவரின் பேச்சை எங்கே காதில் வாங்கினான்?
அவனின் உடல் தான் அங்கே நின்றதே தவிர, மனதோ எதிர்க்கடையை நோக்கி அல்லவா ஓடியிருந்தது.
ஆள்கள், பொருள்களை இறக்கி முடித்திருக்க, அவர்களுக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
‘இவள் ஏன், எல்லாம் தனியாகச் செய்கிறாள்? அவளின் தந்தையோ… உடன்பிறந்தவனோ என்று யாரும் வரவில்லையே… ஒருவேளை இல்லையோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவளின் கடையிலிருந்து ஆள்கள் சென்றிருக்க, புத்தம் புதிய தையல் இயந்திரங்கள் ஒவ்வொன்றின் முன்பும் நின்று, அதை ஆசையுடன் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் கண்களில் தெரிந்த ஜொலிப்பை அவனால் இங்கிருந்தே காண முடிந்தது.
“மலமாடு மாதிரி நிக்கிறான் பாரு… எருமை… எருமை…” என்று அவனின் தந்தை கத்திக் கொண்டிருக்க, காதைக் குடைந்து கொண்டான்.
“ஒருத்தன் அங்கிருந்து எவ்வளவு நேரமா கத்துறான்… ஏதாவது காதில் விழுதா? பொண்ணைப் பார்த்ததும் ஆஆன்னு வாயைப் பிளந்துட்டு நிக்கிறான். சுந்தரு, அப்ப இருந்து அங்கிருந்து கத்துறான். போய்த் தொலைடா…” என்று தந்தை எரிச்சலுடன் சொன்ன பிறகே ஆட்டோ நிறுத்தத்தின் பக்கம் பார்த்தான்.
அங்கிருந்து, “டேய் பாலா, வாடா… சவாரி வந்திருக்கு.” என்று கத்திக் கொண்டிருந்தான் சுந்தர்.
“இருடா வர்றேன்…” என்று பதிலுரைத்தவன் தந்தையின் பக்கம் திரும்பி, “யோவ் தகப்பா… அந்தப் பொண்ணு யாரு, பேரு என்னன்னு விசாரிச்சு வை…” என்றான்.
“நான் உனக்கு அப்பன்டா… மாமா வேலை பார்க்கச் சொல்ற…” என்று அவர் கடுப்பாகிக் கத்த,
“நீதானேயா எனக்குப் பொண்ணு பார்த்துக் கட்டி வைக்கப் போறன்னு சொன்ன… அப்ப மட்டும் மாமா வேலை பார்க்கிறது இல்லையோ…” என்று எகத்தாளமாகக் கேட்ட மகனைக் குமாரசாமி மானாவாரியாகத் திட்ட ஆரம்பிக்க, அவனோ எதையும் காதில் வாங்காமல் தன் பிழைப்பைப் பார்க்க ஓடினான்.
ப்ரீமியம் பிளான் – மேலும் படிக்க👇
============================================================
ரியா மூர்த்தி
இராவணனின் வீணையவள்! பிரதிலிபி
“அவ அப்படியே கிடக்கட்டும். நீ நான் சொன்ன வேலையை மட்டும் பாரு” என்றான் கல் நெஞ்சத்தோடு.
சூர்யா என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் திகைத்து நிற்க, அருகில் இருந்த சந்தோஷ், “சார்… மேடத்தோட பல்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு சார்! இப்படியே விட்டா இன்னும் ஒரு மணி நேரத்துல செத்துப் போயிடுவாங்க” என்று உரக்கக் கத்தினான்.
அந்தக் குரல் ரித்திக்கின் காதுகளில் விழுந்ததும் அவன் சற்றுச் சுதாரித்தான்.
சூர்யாவும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, “சார்… என்னதான் இருந்தாலும் அவங்களும் உங்கள மாதிரி தாய் தகப்பன் இல்லாத பொண்ணு சார். பாவம்…” என்று நேரம் பார்த்து ரித்திக்கின் வீக்னஸைத் தொட்டான்.
அந்த வார்த்தைகள் ரித்திக்கின் ஆத்திரத்தை ஒரு நொடி நிறுத்தியது.
ரியா மூர்த்தி இராவணனின் வீணையவள்
======================================================
தேவி மனோகரன்
A cup of Stories – காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!
===================================================
கவி சந்திரா
கதையின் பெயர் : எனை சுடும் பனி..!!
அதிலிருந்து ஒரு குட்டி டீ..
உடனடியாக இலக்கியாவிற்கு வேறு வேலைகளும் கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் தினம் அலைந்து கொண்டிருந்தவளை அவ்வப்போது ஆனந்தியின் வார்த்தைகள் வழக்கம் போல் பிழைக்கத் தெரியாதவள் என்ற வகையில் குத்தி கிழிக்கத்தான் செய்யும்..! ஆனால் அதையெல்லாம் இப்போது வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருந்தாள் இலக்கியா.
அப்படி ஒரு நாள் கொஞ்சம் நகரத்தை விட்டு வெளியில் உள்ளடங்கிய பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு இன்டர்வ்யூக்காகச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இலக்கியாவின் முன் வேகமாக வந்து வழி மறிப்பது போல் நின்றது அந்தக் கார்.
அதுவோ அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதி. அதிலும் மாலை மங்கி இருள் கவிழத் துவங்கி இருந்த நேரத்தில் அந்த வீதியில் அவளைத் தவிர வேறு யாருமே இல்லை.. இதில் உண்டான பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தவாறே இரண்டு அடிகள் இலக்கியா பின்னுக்கு நகர.. அந்தக் காரில் இருந்து இறங்கி வெளியில் வந்தான் அத்விக்.
“அப்புறம் ஒரு தென்றல் புயலாகி வருதேன்னு வீரமா சுத்திட்டு இருப்பேன்னு பார்த்தா..! என்ன இவ்வளவு சோர்வா நடக்கக் கூட முடியாம நடந்துட்டு இருக்கே..!” எனக் கேலியாகக் கேட்டவாறே தன் காரின் மேல் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் அத்விக்.
அதில் அவனைக் கண்டதும் உண்டான வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொண்டவள் காரைச் சுற்றிக்கொண்டு செல்ல முயல.. “அப்படி அவ்வளவு ஈஸியா என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிட முடியும்னு நினைக்கறியா..!” என்றவாறு அவளின் கைகளைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் இலக்கியா நடப்பதை உணர்ந்து வேகமாக விலகும் முன் அவளைப் பின் இருக்கையில் தள்ளி அதே வேகத்தில் காரையும் எடுத்திருந்தான்.
இதை எதிர்பாராமல் திகைத்து விழித்தவள், எழுந்து கதவை திறக்க முயல்வதற்குள் சென்ட்ரல் லாக் போட்டு காரை எடுத்திருந்தவன் ஜெட் வேகத்தில் அதைப் பறக்க விட்டுக் கொண்டு இருக்க…
எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற முனைப்போடு “ஹெல்ப்.. ஹெல்ப்..” என இலக்கியா கத்தியது எல்லாம் அவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் கேட்காமலே போனது.
காரணம் அத்விக் சென்று கொண்டிருந்த பாதை அப்படிப்பட்டது.
சில நிமிடங்களிலேயே தன் உதவிக்கு யாரும் வர போவதில்லை என்று புரிய.. முழுக்க முழுக்க இருளில் மூழ்கியிருந்த ஆள் அரவமற்ற பாதை வழியாகவே சென்று கொண்டிருந்தவனைப் பின்னால் இருந்து இழுத்து கைகளைப் பிடித்துக் காரை நிறுத்த முயன்று கொண்டிருந்த இலக்கியாவின் அத்தனை முயற்சிகளும் வீணாகப் போனது.
“கொலைகாரா.. கொலைகாரா.. காரை நிறுத்துடா.. ரஞ்சுவை கொன்னது போதாதா..? அடுத்து என்னையும் கொல்லணுமா..!” என அவள் கத்திக் கொண்டிருந்ததையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் சென்று கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் இவளின் தொல்லை அதிகமாகவும், டேஷ் போர்டில் இருந்த க்ளோரோபார்ம் ஸ்ப்ரேவை எடுத்து அவளின் முகத்தில் அடித்திருந்தான் அத்விக்.
அதில் அப்படியே மயங்கி சரிந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவனின் இதழ்கள் கேலியாக வளைந்தது.
டீசர் படிச்சுட்டுட்டீங்களா.. இந்த கதையில் அடுத்து என்ன நடக்கும்னு படிக்க ஆர்வமா இருக்கா.. கீழே உள்ள பிரிமியம் நாவல் லிங்க் உள்ள போய் படிக்கலாம்..
Premium Novels : ஒரு புத்தகம், ஒரு நாள் – Rs.10/-
https://kcpremiumnovels.com/premium-stories/single-book?id=40
======================================================
சகீ ஏழுமலை
அதுவரை சிரித்து பேசிக்கொண்டிருந்தவள் முகம் சட்டென தீவிரத்தை தத்தெடுத்து கொண்டது. “உங்க மேல நான் பைத்தியமா இருக்கேன் தான். அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருக்கற ஆள் இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்கறதை தவிர உங்களுக்கு வேற சாய்ஸ் இல்லை” என்றாள்.
“முடியாது என்னடி செய்வ” சட்டென தாமதிக்காது அவன் வாயில் இருந்து வந்த வார்த்தையில் அவளுக்கும் கோபம் வந்தது “அது தான் ஏன் கேட்கிறேன்” என்றாள் கோபமாக.
“உன்கிட்ட காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”
“எனக்கு தெரிஞ்சாகனும், ஒரு வேலை ஹோஸ்டல்ல தங்கி படிச்சவ தானே வேற எவன் கூடயாவது பழகி இருப்பான்னு நினைக்கறீங்களா, அப்படின்னா வாங்க இப்பவே கூட ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணிட்டு வந்துடலாம்” என்று கூறி முடிக்கும் முன் ஒரு அறை வாங்கி இருந்தாள் கன்னத்தில்.
“என்னடி விட்டா பேசிட்டே போற, உனக்கு நான் சொல்றது புரியலையா, உனக்கு என் மேல இருக்கறது காதல் இல்லைடி” அடி வாங்கிய வலியுடன் அவனை பார்த்தவளை கண்டு நெடுமூச்சை இழுத்து விட்டவன் நெற்றியை நீவி கொண்டான்.
இந்த கதையிலே இதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு தெரியனுமா இதோ link கீழே இருக்கு…
“நெஞ்சில் விழுந்த நேச விதையே”, – பிரதிலிபியில் படிக்க :,
சகீ ஏழுமலை நெஞ்சில் விழுந்த நேச விதையே பிரதிலிபி
==============================================================
காவல் நிலையத்தில் ரௌடிகளை இரக்கமின்றி அடித்து துவம்சம் செய்யும் அந்த முரட்டு ACP சக்தி, வீட்டிற்கு வந்ததும் தன் மனைவி மந்திராவிடம் ஒரு சிறு குழந்தையாக மாறிப் போனான். அவள் ஊட்டும் உணவை உண்டு, அவள் மடியில் கண் மூடும் அவனது வாழ்க்கையில் எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், அன்று வந்த டாக்டர் அங்கிதா, ‘இல்லாத ஒருத்தியோடு இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வாழப் போகிறாய்?’ என்று கேட்ட போது, சக்தியின் உலகம் மட்டுமல்ல… அவனது ஒட்டுமொத்த ரகசியமும் உடைந்து சிதறியது! மந்திரா நிஜமாகவே உயிருடன் இல்லையா? இல்லை இது வேறு ஏதாவது சதியா? உண்மையை அறிய இப்போதே படியுங்கள்!
அணிசா அலி சீதா உன்னை சிறையெடுத்தேன் பிரதிலிபி
===========================================================
சிவயாழினி
“சின்ன பொண்ணு”
சமையலறைக்கு சென்று கொண்டிருந்தவள் வசீகரனின் ஆளுமையான அழைப்பில் திரும்பாமல் தயங்கி நின்றாள்.
“உன் பேரே சின்ன பொண்ணா?”
தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்
“இவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்திருக்க? பேரு மட்டும் சின்ன பொண்ணா? ஸ்கூல்ல கூட இந்த பேர் தானா?”
இல்லை என்று தலை இடவலமாக அசைந்தது
“அப்போ உன் பேரு என்ன?”
“வேண்டாம்”
“நான் உனக்கு எதுவும் தரலம்மா, எதுக்கு வேண்டாம்னு சொல்றே, பேரை சொல்லு”
“என் பேரு வேண்டாம் பொண்ணு”
“இப்படி ஒரு பேரா?” அவன் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் தொண்டைக்குழியில் ஏதோ சிக்கி கொள்ள ஆமாம் என்று தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் உள்ளே சென்று விட்டாள்.
அனைவருக்கும் வணக்கம்,
கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2026 போட்டியில் எனது கதையின் தலைப்பு- மெளனமாய் ஒரு மோகனம்!
நிறையவே தாமதமாகி விட்டது. மன்னிக்கவும், அடுத்த வாரத்திலிருந்து பதிவுகளோடு வருவேன். இப்போதைக்கு தலைப்பை உங்க மனசுல பதிஞ்சு வச்சுக்கோங்க. விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். நன்றி
====================================
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரனான சூரிய வர்மன், தாலி கட்டிய அடுத்த ஐந்தாவது நிமிடமே தன் மனைவியை மண்டபத்திலேயே அனாதையாக விட்டுச் சென்றான்! எந்தவித அலங்காரமும் இன்றி, அப்பாவி வேலைக்காரியான இளயாழினி தன் புகுந்த வீட்டில் வலதுகால் எடுத்து வைத்தபோது, அவளை வரவேற்றது ஆரத்தி அல்ல; மாமியாரின் வன்மமான வார்த்தைகள் தான். தாலி கட்டிய கணவனும் இல்லை, ஆதரவளிக்க சொந்தமும் இல்லை… வேலைக்காரியாகவே வாழ்ந்தவள், இந்த அரண்மனையில் படும் சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஆனால், இந்த கட்டாயத் திருமணத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் அந்த மிகப்பெரிய ரகசியம் அவளுக்குத் தெரியவரும்போது என்ன நடக்கும்? விடை காண உடனே படியுங்கள்!
கவிஸ்ரீ என் ஆண்மைக்கு உயிர் தந்தவள் நீயடி
===============================================
கவி சந்திரா
ப்ரீ ஸ்டோரி..
மொத்தம் 15 கதைகள்…
மே 31 வரை இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே லிங்க் இருக்கும்..
லவ் ஸ்டோரி
பேமிலி ஸ்டோரி
த்ரில்லர் ஸ்டோரி
சைக்கோ கில்லர் ஸ்டோரி
ஹாரர் ஸ்டோரி
என பல வகை கதைகள் ஒரே இடத்தில் படிக்கலாம்.. அதுவும் இலவசமாக..
ஐந்து எழுத்தாளர்களின் கதைகள் அங்கு உள்ளது..
கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..
https://kcpremiumnovels.com/free-stories/free-stories
லிங்க் உள்ளே போய் உங்க மெயில் ஐடி கொடுத்து ரெஜிஸ்டர் செஞ்சுக்கோங்க டியர்ஸ்.. அதுக்கு பிறகு உங்க மெயில் ஐடிக்கு ஒரு OTP வரும்.. அதை வெச்சு சேம் மெயில் ஐடி அண்ட் பாஸ்வேர்ட் கொடுத்து இந்த OTPயும் கொடுத்தா உங்களுக்கு லாகின் ஆகிடும்.. இந்த ஐடி பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க..
இந்த லிங்க் உள்ளே போனதும் மேலே வலது ஓரத்தில் மூன்று கோடு இருக்கும். அதை க்ளிக் செஞ்சா ரிஜிஸ்டர் ஆப்ஷன் வரும்.. அதே போல் மீண்டும் மூன்று கோடு உள்ளே போய் லாகினும் செஞ்சுக்கலாம்..
படித்து விட்டு உங்க ரேட்டிங் மற்றும் ரிவ்யூவை அங்கேயே எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
==========================================================
