Tamil Novels – Tamil Family Novel Writers / Pengal Thalam

 
 
 
Home > Tamil Novels > வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் >
 
 

 

Tamil Novels – Intro
[தமிழ் நாவல்கள் – அறிமுகம்]
 
          
                    தமிழில் வெளிவந்த குடும்ப மற்றும் காதல்  நாவல்களும், அதன் கதை ஆசிரியர்களும் …

 

 

என்னுரை :

                       தோழிகளே…. தமிழ் நாவல்கள் பற்றிய நம்முடைய  ஆர்வம் இப்போதெல்லாம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துவருவதைப் பார்த்து மலைப்பாகவும், அதே சமயத்தில் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. நான் படிக்கும் காலத்தில் நாவல்கள் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் அளவுக்கு மற்றவர்களுக்கும் இல்லையே.. என்று சிறிது வருந்தி இருக்கின்றேன். இப்போது போல அதிகம் எழுத்தாளர்கள் இல்லாவிட்டாலும் கூட அதை ஒரு படி மேலேயே சென்று மனத்திருப்தி அளிக்க நம் ரமணி மேடம் இருந்தார்கள்.

 

                        அவர்கள் நாவல்கள் என்றால் ஒவ்வொரு நூலகமாக ஏறியேறி இறங்கித் தேடிய அனுபவங்கள் எல்லாம் மறக்க முடியாதவை. [ மேடம் ரமணிச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ]

                           இன்று இணையத்தில் நாவல்கள் இனிமையான பழவகைகளைப் போல, பலவிதமான வண்ண மலர்கள் போல சிதறி இருக்கின்றன. அத்தகைய நாவலாசிரியர்களுக்கும்,  இனி எழுதப் போகும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் எழுத்துலக ரசிகைகள் சார்பாக மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல இணைய தளங்களில் தமிழ் நாவல்கள் தொடர்கதைகளாக எழுதப்பட்டு வருகின்றன. நான் படிக்கின்ற வரையில் ஏறக்குறைய எல்லா நாவல்களுமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்றே வருகின்றன. ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு பாணி இருப்பதை வாசிக்கும் போதே பார்க்க முடிகின்றது.

                    ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அந்த நாவல்கள் எல்லாமே எல்லோருடைய பார்வைக்கும் சென்று சேர்வதில்லை. [அதாவது அவர்கள் இணையத்தளத்தில் இலவச வாசிப்புக்கு என்று அளிக்கும் அந்த குறிப்பிட்ட காலநேரத்துக்குள் …] அதையும் மீறி நம் கவனத்துக்குள் வரும்போது அந்த ‘நாவலுக்கான இணைப்பு இணையத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது ‘ – என்ற செய்தி வந்து நமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. என்னைப் போல பலரும் இத்தகைய சூழலை சந்தித்திருப்பீர்கள் என்று எண்ணும் போது தான் இத்தளத்தில் அந்தந்த நேரத்தில் வெளியிடும் இலவச இணைப்பின் பக்கத்தை அவர்களின் தளங்களின் அறிவிப்பையும், அவர்கள் நமக்கு அளிக்கும் இலவச இணைப்பையும்  வெளியிட்டு, நாவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாமே.. என்று தோன்றியது.

                எனவே இந்த தளத்தில் இனி தமிழ் நாவல்களின் விவரங்களும், அதன் இலவச இணைப்பின் பக்கத்தையும் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.  தமிழ் எழுத்தாள பெருமக்கள் தங்களது தளத்தில் இலவச இணைப்பு அளித்திருக்கும் வரையில் தான் இந்த தளத்திலும் அந்த இலவச இணைப்பு இருக்கும் என்பதால், அந்த காலநேரத்திற்குள் இணைப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                        மேலும் உங்களுக்கு தெரிந்த கதைகளின் விவரங்களை இங்கு கொடுக்கப்படும் கருத்து பெட்டியில் [coment box] தெரியப்படுத்தினால் மற்ற நாவல் ரசிகைகளுக்கும் சென்று சேரும் வகையில் அவற்றின் சட்டப்பூர்வமான இணைப்பினைத் தேடி அளிக்க இயலும்.           

 [ இந்தளத்தில் கொடுக்கப்பட்டு உள்ள நாவல்களின் இணைப்புகள் அனைத்தும் அந்த எழுத்தாளர்களால் தங்களது தளத்தில் இலவசமாக வாசிக்க கொடுக்கப்பட்டு இருக்கும் அவர்களது இணைப்புகளே தவிர தனிப்பட்ட இணைப்பு ஏதும் இங்கு அளிக்கப்படமாட்டாது. இந்த இணைப்புகள் அவர்கள் தங்களது தளத்தில் இருந்து எடுத்துவிட்டால் இங்கும் அந்த இணைப்பு செயல்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளம் எல்லா தமிழ் நாவல்கள் பற்றியும் தமிழ் நாவல் ரசிகைகள் சிரமம் இன்றி ஒரே தளத்தில் அறிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. ]
 
 
                                                                                                           இவண்
                                                                                                 பெண்கள் தளம்

 

 

 

Pengal Thalam
Author: Pengal Thalam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: